பக்கம் எண் :

பக்கம் எண் :376

Manimegalai-Book Content
25. ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
 

என்றே - மன்னவனே நீ மாறுபட்ட சிந்தனையைக் கடைப்பிடித்தனை என, முதுமொழி கூற முதல்வன் கேட்டு - அறிவுரைகளைக் கூறப் புண்ணியராசன் அதனைக் கேட்டு;

துயர் நிலை யுலகம் என்புழி உலகம் உயிர்களை யுணர்த்திற்று. உயர்நிலை யுலகம் - வீட்டுலகம்; 1 "உயர்நிலை யுலகமுஞ் சிறிது" என்பதுங் காண்க. பெறுதி - பேறு; ஊதியம். இரங்குதல் ஓம்புதல் என்னும் வினைகளை ஏனையிடத்துங் கூட்டி, இரங்கிக் காவாமல் என்றும் இரங்கிக் காக்குமென்றும் முறையே பொருள் கொள்க. முதுமொழி - அறிவு வாய்ந்த மொழி.

120--3.    மணிபல்லவம் வலங்கொள்வதற்கு எழுந்த-மணி பல்லவத்தினை யடைந்து வலம் வந்து வணங்குவேன் என்றெழுந்த, தணியா வேட்கை தணித்தற்கு அரிதால்-நீங்காத விருப்பமானது தணித்திட அரியதாகும் ஆகலின், அரசும் உரிமையும் அகநகர்ச்சுற்றமும் - அரசாட்சியையும் உரிமையையும் அகநகரிலுள்ள பரிசனங்களையும், ஒருமதி எல்லை காத்தல் நின் கடன் என - ஒரு திங்கள் அளவுங் காத்தல் நின்னுடைய கடமையாகும் என மொழிந்து;

உரிமை - அந்தப்புர மகளிர். அகநகர்ச் சுற்றம் - அகப் பரிவாரம். முதலிய பரிசனங்கள்.

124--7.    கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஉய்-மரக்கலத் தொழிலாளரை வருக என அழைத்துக்கொண்டு. இலங்கு நீர்ப் புணரி எறிகரை எய்தி - விளங்குகின்றி நீரினையுடைய கடல் அலைவீசுகின்ற கரையை அடைந்து, வங்கம் ஏறினன் - மரக்கலத்தின்கண் ஏறினன், மணிபல்லவத்திடைத் தங்காது அக்கலம் சென்று சார்ந்து இறுத்தலும்-அம் மரக்கலம் இடையே தங்காமற் சென்று மணிபல்லவத்தை அடைந்து தங்குதலும்;

கலம் செய் கம்மியர் - மரக்கல் மியற்றுந் தொழிலாளர்; மரக்கலத்தின் உறுப்புகள் சிதைவுழி அவற்றைச் செம்மை செய்தற்கு அவரையும் உடன்கொண்டு செல்வர்.

128--33.    புரைதீர் காட்சிப் பூங்கொடி பொருந்தி-குற்றமற்ற மெய்யறிவினையுடைய மணிமேகலை ஆண்டு எய்தி, அரைசன் கலம் என்று அகமகிழ்வு எய்தி - புண்ணியராசனது மரக்கலம் என்று அறிந்து உளமகிழ்ச்சியுற்று, காவலன் தன்னொடும் கடற்றிரை உலாவும் தேமலர்ச் சோலைத் தீவகம் வலஞ்செய்து - அரசனுடன் கடலில் அலைகள் உலாவுகின்றனே் பொருந்திய மலர்ப்பொழிலையுடைய மணிபல்லவத்தை வலங்கொண்டு, பெருமகன் காணாய் பிறப்பு உணர்விக்கும் தரும பீடிகை இது எனக் காட்ட - அரச! முற்பிறப்பினை யறிவிக்கும் அறத்தவிசு ஈது காண்பாயாக என்று காட்ட;



1 குறுந். 361.