பக்கம் எண் :

பக்கம் எண் :377

Manimegalai-Book Content
25. ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
 
காவலன் றன்னொடும் வலஞ்செய்து பீடிகையைக்காட்ட வென்க. வலங்கொண்டு ஏத்தினன்

134--7.   மன்னவன் - வேந்தன் அப்பீடிகையை வலம்வந்து துதித்தனன், மன்னவற்கு உலந்த பிறவியை உயர்மணிப் பீடிகை - உயரிய மணிகளானிழைக்கப்பட்ட அவ்வறத்தவிசு அரசனுக்குச் சென்று பிறப்பின்கண் நிகழ்ந்த செய்தியை, கையகத்து எடுத்துக் காண்போர் முகத்தை மையறு மண்டிலம் போலக் காட்ட-கையிலெடுத்துக் காண்போருடைய முகத்தைத் தெளிவாக்க் காண்பிக்கும் குற்றமற்ற கண்ணாடியைப்போல எடுத்துக்காட்ட;

பீடிகை உலந்த பிறவியை மண்டிலம்போலக் காட்டவென்க.

138--57.    என் பிறப்பு அறிந்தேன் என் இடர் தீர்ந்தேன் - எனது முற்பிறப்பினை உணர்ந்தேன் னது இடுக்கணினின்றும் நீங்கினேன், தென்றமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய் - தென்றமிழ் மதுரையின்கணுள்ள அழகு மிக்க கலைமகளே, மாரிநடுநாள் வயிறு காய் பசியால்-மாரிக்காலத்து நள்ளிரவில் வயிற்றினைக் காய்கின்ற பெரும்பசியினாலே, ஆரிருள் அஞ்சாது அம்பலம் அணைந்தாங்கு இரந்தூண் வாழ்க்கை என்பால் வந்தோர்க்கு - செறிந்திருக்கின்ற இருளையும் அஞ்சாதவராய் அம்பலத்தை அடைந்து இரந்துண்ணும் உணவையே பொருளாகவுடைய என்னிடம் வந்தவர்கட்கு, அருந்து ஊண் காணாது அழுங்குவேன் கையில் - உண்பதற்குரிய உணவொன்றையும் காணாமல் வருந்துவேனுடைய கைகளில், நாடு வறங் கூரினும் இவ்வோடு வறங்கூராது ஏடா அழியல் எழுந்து இது கொள்கென - ஏடா வருந்தற்க நாடெங்கும் மழையின்றி வறுமையுற்றாலும் இந்த வோடு வறுமையுறாது ஆகலின் நீ எழுந்து இதனைக் கொள்வாயாக என்று கூறி, அமுதசுரபி அங்கையில் தந்து என் பவம் அறுவித்த வானோர் பாவாய் - அமுதசுரபி என்னும் அரும்பெறற் பாத்திரத்தை எனது கையின்கண் கொடுத்தருளி என்னுடைய வினைத்தொடர்புகளை அறுவித்த இமையோர் பாவையே, உணர்வில் தோன்றி உரைப்பொருள் உணர்த்தும்- அறிவின்கண்ணே தோன்றிச் சொற்பொருள்களை உணர்த்தியருளும், மணிதிகழ் அவிரொளி மடந்தை - பளிக்குமணி போல விளங்குகின்ற ஒளிவிடும் திருமேனியையுடைய தேவியே, நின்அடி- நின்திருவடிகளை, தேவராயினும் பிரமராயினும் அவர்தம் நாமாசு கழூஉம் நலங்கிளர் திருந்தடி - தேவராயினும் பிரமராயினும் அவர் தம் நாக்குற்றத்தினைப் போக்கும் சிறப்புமிக்க திருந்திய அடிகளை, பிறந்த பிறவிகள் பேணுதல் அல்லது - யான் பிறக்கின்ற பிறவிகள்தோறும் உளத்திற்கொண்டு வழிபடலல்லது, மறந்து வாழேன் மடந்தை என்று ஏத்தி-மறந்து உயிர்வாழேன் மெல்லியால் எனத் துதித்து, மன்னவன் மணிமேகலையுடன் எழுந்து - அரசன் மணி மேகலையுடன் அங்கு நின்றும் எழுந்து, தென்மேற்காகச் சென்று-