தென்மேற்றிசையின் கட்சென்று,
திரைஉலாம் - அலைகள் உலாவுகின்ற, கோமுகி என்னும் பொய்கையின் கரை -
கோமுகி என்ற வாவியின் கரையில், ஓர் தூமலர்ப் புன்னைத் துறை நிழல் இருப்பதுறையினருகே
தூய மலர்களையுடைய ஒரு புன்னைமர நிழலின்கண் இருப்ப;
பீடிகையாற் பழம் பிறப்பை
யணர்ந்த புண்ணியராசன் சென்ற பிறப்பிலே மதுரையிற் கலைநியமத்தில் சிந்தாதேவி
அமுதசுரபியைத் தனக்கு அளித்ததனை அறிந்தானாகலின் அத்தேவியைப் பரவுகின்றான்.
இங்ஙனம் அவன் அமுதசுரபி பெற்ற வரலாற்றினை மேலே பாத்திர மரபு கூறிய
காதையில் அறிக. ஏடா: கெழுதகைச் சொல், பவம் - கன்மக் கூட்டம்.
நின்னடி, நலங்கிளர் திருந்தடி என ஒருபொருண் மேல் அடுக்கிவந்தன. கழூஉம்-போக்கும்.
பிறவிகள் - பிறவிகடோறும், மன்னவன் ஏத்தி எழுந்து சென்று கரையில் நிழலில்
இருப்பவென்க. என்னிடர் தீர்த்த; ஏடா பரியல்; என்பனவும் பாடம்.
158--67
. ஆபுத்திரனோடு
ஆயிழை இருந்தது காவற்றெய்வதம் கண்டு உவந்து எய்தி - ஆபுத்திரனுடன் மணிமேகலை
கோமுகிக் கரையில் இருந்தனை மணிபல்லவத்தின் காவற்றெய்வமாகிய தீவ திலகை
கண்டு மகிழ்ச்சியுடன் ஆண்டு அடைந்து, அருந்து உயிர் மருந்து முன் அங்கையில்
கொண்டு - முற்பிறப்பில் உண்ணப்படும் அரிய உயிர் மருந்தினைக் கையகத்திற்கொண்டு,
பெருந்துயர் தீர்த்த அப் பெரியோய் வந்தனை-உயிர்களின் பெரிய துன்பத்தை
நீக்கிய பெரியோய் ஈண்டு வந்தாய், அந்நாள் நின்னை அயர்த்துப் போயினர்-அந்நாளில்
நின்னை இங்குவிட்டு மறந்நு சென்றோர்கள், பின்னாள் வந்து நின் பெற்றிமை
நோக்கி - பின்னாட்களில் ஈண்டு வந்து நின் தன்மையைக் கண்டு, நின்குறி
இருந்து தம்முயிர் நீத்தோர் -நீ இறந்தவிடத்தில் உண்ணாநோன்புடனிருந்து
தம் உயிரை விட்டோராகிய, ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவைகாண் ஒன்பது
வணிகர்களின் உடல் எலும்புகளாகிய இவற்றைக் காண்பாயாக, ஆங்கு அவர் இட
உண்டு அவருடன் வந்தோர் ஏங்கி மெய் வைத்தோர் என்பும் இவைகாண் - அச்
செட்டிகள் உணவளிக்க உண்டு அவர்களுடன் வந்தோர்கள் ஏக்கமுற்று உயிர் நீங்கினோர்களுடைய
என்புகளாகிய இவற்றையுங் காண்பாயாக;
ஆபுத்திரனோடு மணிமேகலை
இருந்ததனைக் கண்டு அடைந்த தீவ திலகை முறைய அவ்விருவரையும் நோக்கிப் பின்வருமாறு
கூறுவதாயிற்று. கண்டு வந்தெய்தி என்று பிரித்தலுமாம். உயிர் மருந்து-சோறு.
அப் பெரியோய் - அத்தகு பெரியோய் குறி - இடம். போயினர், நீத்தோர்,
வந்தோர், வைத்தோர் வினைப்பெயர்கள். போயினவர் வந்து நீத்தார்; அங்ஙனம்
நீத்தவராகிய செட்டிகள் எனவும், வந்தோராகிய வைத்தோருடைய என்பு எனவும்
கொள்க.
|