168--71
. ஊர்
திரை தொகுத்த உயர் மணல் புதைப்ப-பரந்த அலைகளால் திரட்டப்பட்ட உயர்ந்த
மணல் மறைப்ப, ஆய்மலர்ப்புன்னை அணிநிழற் கீழால் - அழகிய பூக்களையுடைய
புன்னை மரத்தின் அழகிய நிழலின் கீழிடமத்தே, அன்புடை ஆருயிர் அரசர்க்கு
அருளிய என்புடை யாக்கை இருந்தது காணாய் - அன்பினையுடைய அரியவுயிரை அரசனாகிய
நினக்குக் கொடுத்த என்பினாலாகிய யாக்கை இருக்கின்றதைப் பாராய்;
கீழால்: உருபு மயக்கம்.
ஆருயிர் என்றது விஞ்ஞான கந்தத்தை. அரசற்கு: முன்னிலையிற் படர்க்கை.
172--4
. நின்
உயிர் கொன்றாய் - நீ நின் உயிரையுங் கொன்றனை, நின் உயிர்க்கு இரங்கி
- நினது உயிருக்கு இரக்கமுற்று, பின்னாள் வந்த பிறர் உயிர் கொன்றாய்
- பின்னாளில் ஈண்டுவந்த ஏனோரின் உயிரையுங் கொன்றனை, கொலைவன் அல்லையோ
கொற்றவன் ஆயினை-அங்ஙனம் கொலைஞனாகவுள்ள நீ யல்லயோ அரசனாயினை என்று
கூறி;
நின் உயிர்க்கு - நின்னுயிர்
கழிந்தமைக்கு. பிறர் உயிர் விடுதற்குக் காரணமானமையின் ''பிறருயிர் கொன்றாய்''
என்றது. இது பழிப்பது போலப் புகழ்தலின் வஞ்சப் புகழ்ச்சி யென்னும் அணியாகும்.
175--7.
பலர்
தொழு பாத்திரம் கையின் ஏந்திய-பலரும் வணங்குந் தகுதியுடைய அமுதசுரபியைக்
கையில் ஏந்தியுள்ள, மடவால் நல்லாய் - மடப்பம் பொருந்திய மெல்லியலே,
நின்றன் மாநகர் - நின்னுடைய பெரிய நகரம், கடல் வயிறு புக்கது - கடலின்
வயிற்றிற் புகுந்தது, காரணம் கேளாய்-அதன் காரணத்தைக் கேட்பாயாக; மாநகர்
- காவிரிப்பூம் பட்டினம்.
178--83.
நாகநன்னாடு
ஆள்வோன்தன் மகள் பீலிவளையென்பாள் பெண்டிரின் மிக்கோள்-நாகநன்னாட்
டரசன் புதல்வியாகிய மகளிருள் எழில் மிகுந்தோளாய பீலிவளை என்பவள், பனிப்பகை
வானவன் வழியில் தோன்றிய - ஞாயிற்றுப் புத்தேள் மரபில் உதித்த, புனிற்றிளங்
குழவியோடு பூங்கொடி பொருந்தி - மிக்க இளமையுடைய குழவியுடன் அவளும் வந்து,
இத் தீவகம் வலஞ்செய்து - இத் தீவினை வலம் வந்து, தேவர்கோன் இட்ட மாபெரும்
பீடிகை வலங்கொண்டு ஏத்துழி-இந்திரனா லிடப்பட்ட பெருமை பொருந்திய இவ்
வறத் தவிசினை வலஞ்செய்து துதிக்கும்பொழுது;
ஆள்வோன் - வளைவணன்.
பீலிவளை யென்பாளாகிய பூங்கொடி குழவியொடு பொருந்தி யென்க.
184--91.
கம்பளச்செட்டி
கலம் வந்திறுப்ப - கம்பளச் செட்டியினுடைய மரக்கலம் ஈண்டுவந்து தங்க, அங்கவன்பாற்
சென்று அவன் திறம் அறிந்து-அவ் வணிகனிடம் போய் அவன் காவிரிப்பூம் பட்டினஞ்
செல்லுதலை அறிந்து, கொற்றவன் மகன் இவன் கொள்கெனக் கொடுத்தலும்-இவன்
அரசன் புதல்வன் இவனைக்கொண்டு.
|