செல்க
என்று கொடுத்தலும், பெற்ற உவகைநன் பெருமகிழ் வெய்தி - உவகைமிக்குடையனாய
அவ் வணிகன் அப் புதல்வனைப் பெற்றதனாற் பெருமகிழ்ச்சி யுற்று, பழுதில்
காட்சிப் பைந்தொடி புதல்வனை - பீலிவளை தன் குற்றமற்ற காட்சியினையுடைய
அப் புதல்வனை, தொழுதனன் வாங்கி - வணங்கி வாங்கிக்கொண்டு, துறை பிறக்கு
ஒழிய - இக் கடற்றுறை பின்னொழியுமாறு, கலங்கொண்டு பெயர்ந்த அன்றே -
மரக்கலத்திற் கொண்டுசென்ற அன்றைக்கே, கார் இருள் - நள்ளிரவின் இருளில்,
இலங்குநீர் அடைகரை அக் கலங் கெட்டது - விளங்குகின்ற நீரினையுடைய கரையருகில்
அவ் வங்கங் கவிழ்ந்தது;
கம்பளச் செட்டி, பெயர்;
கம்பள வாணிகஞ் செய்யும் செட்டியுமாம். அரசகுமாரனாகலின் தொழுது வாங்கினான்
என்க. பிறக்கு - பின். கெட்டது - சிதைந்தது என்றுமாம்.
192--200.
கெடுகல
மாக்கள் - அழிந்த மாக்கலத்திலிருந்து மீண்டோர், புதல்வனைக் கெடுத்தது-அரசகுமாரனை
இழந்த செய்தியை, வடிவேற்கிள்ளி மன்னனுக்கு உரைப்ப - கூரிய வேலினையுடைய
கிள்ளியாகிய அரசனுக்கு மொழிய, மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன்-வேந்தன்
புதல்வனுக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறாதவனாய், நன்மணி இழந்த நாகம் போன்று
- நல்ல மாணிக்கத்தை இழந்த பாம்பைப்போல வருந்தி, கானலும் கடலும் கரையும்
தேர்வுழி -கடற் கானலிலும் கடலிலும் கடற்கரையிலும் தேடிக்கொண்டிருக்குமிடத்து,
வானவன் விழாக்கோள் மாநகர் ஒழிந்தது - காவிரிப்பூம்பட்டினம் இந்திரவிழா
வெடுத்தலை ஒழிந்தது, மணிமேகலா தெய்வம் மற்றது பொறாஅள்-மணிமேகலா தெய்வம்
அக்குற்றத்தினைப் பொறாமல், அணிநகர்தன்னை அலைகடல் கொள்கென இட்டனள்
சாபம் - அழகிய நகரத்தை அலைகள் செறிந்த கடல்கொள்வதாக என்று சாபமிட்டனள்,
பட்டது இதுவால் - கடல் கோள் நேர்ந்த செய்தி இதுவாகும்;
1
''நன்மணி இழந்த நாகம்போன்று'' என்னும் இவ் வுவமை முன்னரும் இந்நூலுட் போந்தமை
காண்க. காரணங்கேளாய் இட்டனள் சாபம் பட்டது இது என ஒட்டுக.
201--8.
கடவுள்மாநகர்
கடல்கொளப் பெயர்ந்த வடிவேல் தடக்கை வானவன்போல-பெருமை-பொருந்திய தனது
தேவ நகரம் கடல் கோட்பட ஆண்டுநின்றும் நீங்கிய கூரிய வச்சிரப் படை பொருந்திய
பெரிய கையையுடைய இந்திரன்போல், விரிதிரை வந்து வியன் நகர் விழிங்க
- விரிகின்ற அலைகளையுடைய கடல்வந்து தனது அகன்ற நகரத்தை விழிங்க, ஒருதனி
போயினன் உலக மன்னவன்- உலக மன்னவனாகிய நெடுமுடிக்கிள்ளி அங்கிருந்து துணையின்றிச்
1
மணி. 7: 131.
|