சென்றனன், அருந்தவன் தன்னுடன்
ஆயிழை தாயரும் - அரிய தவமுடைய அறவண வடிகளுடன் நின் தாயாராகிய மாதவியுஞ்
சுதமதியும், வருந்தாது ஏகி வஞ்சியுட் புக்கனர் - வருத்தம் ஒன்று மின்றிச்
சென்று வஞ்சி நகரம் புகுந்தனர், பலப்புநீர்ப் பௌவம் பலர் தொழக் காப்போள்
உரைத்தன - பரந்த நீரினையுடைய கடலைப் பலரும் வணங்குமாறு காக்கின்ற மணிமேகலா
தெய்வத்தால் இவை எனக்கு உரைக்கப்பட்டன;
"கடவுண்மாநகர்......வானவன்போல" என்றது இல்பொருளுவமம்;
1
வளமலர்ப் பூம்பொழில் வானவர் மகளிரொடு
விளையாட்டு விரும்பிய விறல்வேல்
வானவன்
பொலம்பூங் காவும் புனல்யாற்றுப்
பரப்பும்
இலங்குநீர்த் துருத்தியும்
இளமரக் காவும்
அரங்கும் பள்ளியும் ஒருங்குடன்
பரப்பி
ஒருநூற்று நாற்ப தியோசனை
விரிந்த
பெருமால் களிற்றுப் பெயர்வோன்
போன்று"
என உவமங் கூறியிருத்தலும் ஈண்டு அறியற்பாலது.
208--13
. கேட்க
உருகுவையாயின் - இன்னும் கேட்க விரும்பினையாயின், நின் மன்னுயிர் முதல்வனை
- நின் தந்தை மரபில் முந்தை யோனாய ஒரு வணிகனை, மணிமேகலா தெய்வம் முன்னாள்
எடுத்ததும் - மணிமேகலை தெய்வம் மரக்கலமுடைந்த நாளில் கடலினின்றும் எடுத்துக்
காப்பாற்றியதும், அந்நாள் ஆங்கவன் - அந்நாளில் அவ்வணிகன், அறவரசாண்டதும்-புண்ணியதானஞ்
செய்தனையும், அறவணன் தன்பால் - அறவண அடிகளிடம், மறுபிறப் பாட்டி வஞ்சியுட்
கேட்பை என்று-மறுபிறப் புணர்ந்தோளாகிய நீ வஞ்சி நகரத்தின்கண் கேட்டுணர்வை
என்று கூறி, அந்தரத் தீவகத்து அருந்தெய்வம் போயபின் - மணிபல்லவத் தீவினுட்
காவல்புரியும் அரிய தெய்வமாகிய தீவதிலகை சென்றபின்னர்;
உயிர் என்றது குடியை உணர்த்திற்று.
அறவரசு - புண்ணிய தானம். மறுபிறப்பாட்டி-மறுபிறப்பினை அறியும் பெற்றியள்.
அந்தரத் தீவு - சிறு தீவு.
214--20.
மன்னவன்
இரங்கி-அரசன் வருத்தமுற்று, மணிமேகலையுடன் துன்னிய தூமணல் அகழ-மணிமேகலையுடன்
புன்னை நீழலில் நெருங்கிய தூய மணலைத் தோண்ட; தோன்ற - வெளிப்பட்டு,
ஊன்பிணி அவிழவும் உடல்என்பு ஒடுங்கித்தான்பிணி அவிழாத் தகைமையதாகி-தசையினது
பிணிப்பு நீங்கவும் யாக்கையின் எலும்புகள் ஒடுக்கமுற்றுத் தான் கட்டவிழாத
தன்மையுடையதாய், வெண்சுதை வேய்ந்து அவண் இருக்கையின் இருந்த பண்புகொள்
யாக்கையின் படிவம் நோக்கி - வெள்ளிய சுண்ணத்தினால் வேயப்பட்டு அவ்விடத்து
இருத்தலைப் போன்றிருந்த மாண்புமிக்க முற்பிறப்பின்
1 சிலப். 25: 106.
|