வடிவத்தைப் பார்த்து, மன்னவன்
மயங்க - புண்ணிய ராசன் கலக்க மெய்த;
தூ - தூய்மை. பிணி - கட்டு. தோன்றித் தகைமயதாகி இருந்த யாக்கையின் படிவமென்க.
220--31.
மணிமேகலை
எழுந்து - மணிமேகலை உடனே எழுந்து, என்னுற்றனையோ இலங்கிதழ்த் தாரோய்
- விளங்குகின்ற இதழ்கள் பொருந்திய மலர்மாலையினையுடைய மன்னவனேநீ என்ன
துன்பம் எய்தினையோ, நின்நாடு அடைந்து யான் நின்னைஈங்கு அழைத்தது - யான்
நின்நாட்டினை யடைந்து நின்னை இத் தீவிற்கு அழைத்தது, மன்னா நின்றன் மறுபிறப்பு
உணர்த்தி - அரசே நின்னுடைய பழம் பிறப்பினை நினக்கு அறிவித்து, அந்தரத்
தீவினும் அகன்பெருந் தீவினும் நின்பெயர் நிறுத்த-இரண்டாயிரஞ் சிற்றிடைத்
தீவுகளிலும் நான்கு பெருந் தீவுகளிலும் நினது புகழை நிலைபெறுத்துவதற்கே யாகும்,
நீணிலமாளும் அரசர் தாமே அருளறம் பூண்டால்- பெரிய நிலவுலகினை ஆள்வோராகிய
அரசர்களே அருளாகியஅறத்தினை, மேற்கொண்டால் பொருளும் உண்டோ பிற புரை
தீர்த்தற்கு - உலகில் குற்றந் தீர்த்தற்குப் பொருளும் உண்டோ, அற மெனப்படுவது
யாது எனக் கேட்பின் மறவாது இதுகேள்-அறம் என்று கூறப்படுவது யாது என்று கேட்பின்
யான் கூறுகின்ற இதனை மறவாது கேட்பாயாக, மன்னுயிர்க்கெல்லாம் உண்டியும்
உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்லென - நிலைபெற்ற உயிர்கட்கெல்லாம்
உணவும் ஆடையும் தங்குமிடமும் அளித்த லல்லது வேறு யாம் கண்டதில்லை என்று
கூற;
மறுபிறப்பு என்றது, ஈண்டுச்
சென்ற பிறப்பினை. அந்தரத்தீவு பெருந் தீவு என்பவற்றை முன்
1
"நால்வகை மரபின் மாபெருந் தீவும், ஓரீ ராயிரஞ் சிற்றிடைத் தீவும்" என
உரைத்தமையா னறிக. பொருளு முண்டோ புரைதீர்த்தற்கு என்றது, அரசர் அருளறம்
பூண்டால் எல்லா வுயிர்களும் தாமே குற்றமற்றனவா மாதலின், உலகிலே குற்றந்
தீர்த்தல் என்பதற்குப் பொருளே யிராதென்பெடி. பிற; அசைச்சொல்; பிறவற்றின்
என்றுமாம். உண்டியும் உடையும் உறையுளும் அளித்தலல்லது என விரித்துரைக்க.
2; "அற்றார்கட்கு, உண்டியுறையு
ளுடுக்கை யிவை யீந்தார்" என்பது அறியற்பாலது.
231--9.
காவலன்
உரைக்கும் - அரசன் கூறுவான், என் நாட்டாயினும் பிறர் நாட்டாயினும் நன்னுதல்
உரைத்த நல்லறம் செய்கேன் - நன்னுதால் என்னுடைய நாட்டிலும் பிறருடைய நாடுகளிலும்
நீ மொழிந்த நல்லறங்களைச் செய்வேன், என் பிறப்பு உணர்த்தி என்னை நீ
படைத்தனை - என் பழம் பிறப்பினை அறிவித்து அறிவுடையவனாக்கினமையின் நீ
என்னைப் படைத்தோயாவை, நின்றிறம் நீங்கல் ஆற்றேன் யான் என - ஆகலின்
யான் நின்னிடத்தினின்றும
1
மணி. 4 : 195 - 4.2
ஏலாதி. 9.
|