பிரிதலை ஆற்றேன் என்றுரைக்க, புன்கண் கொள்ளல் - துன்பமெய்தாதே, நீ
போந்ததற்கு இரங்கி-நீ ஈண்டு வந்ததற்கு வருந்தி, நின்மன்பெரு நாடு வாயெடுத்து
அழைக்கும்-நினது மிகப்பெரிய நாடு ஓலமிட்டு நின்னையழைக்கும் ஆகலின், வங்கத்து
ஏகுதி - மரக்கலத்தினிடமாகச் செல்வாய், வஞ்சியுட் செல்வேன் என்று-யான்
வஞ்சிமாநகரஞ் செல்வேன் என்று கூறி, அந்தரத்து எழுந்தனள் அணியிழை தானென்-மணிமேகலை விசும்பின் வழியாக எழுந்துனள் என்க.
ஆயினும்: எண்ணிடைச் சொல். பழம்பிறப் புணர்ந்து நல்லறம் பூண்டற்குரிய
சிறப்புணர்வினனாதற்குக் காரணமா யிருந்தமையின் ''என்னை நீ படைத்தனை'' என்றான்;
1
"நானவன்றன் மகள்" என்பது போன்றதிது. நின்னாடு வாயெடுத்தழைக்கும் என்னுங்
கருத்து ''நீ யொழி காலை ... கூஉம்'' என முன் இக் காதையுள் வந்திருத்தல்
காண்க.
அரசன், புகுந்து வணங்கிக் கேட்டு, ''இவள் யார்'' என்னக் கஞ்சுகன், ''அன்றே
உரைத்தேன்; அவள் ஈங்கு வந்தனள்;'' என்றலும், இளங்கொடி, ''ஆங்கு வருவாய்''
என்று புகன்று எழுந்து இழிந்து போகி வலங்கொண்டு பீடிகையைக் காண்டலும், தொழுது
அவள் வலங் கொள்ள, அப் பீடிகை உணர்த்த, பணிந்து, ''அன்றே போன்றது'' என்று
ஏத்தி வலங்கொண்டு இன்னணமாக, இறைவனும் விட்டுப் புக்குக் கேட்டு எய்தி
நினைந்து கள்ளாட்டிகழ்ந்து சாற்றி, ''வித்து இன்று விளைந்து'' என்று கூற, மந்திரி
சனமித்திரன், தொழுதேத்தி, ''மன்னவ, மதிமாறோர்ந்தனை'' என்று முதுமொழி
கூற, முதல்வன் கேட்டு, ''வேட்கை தணித்தற்குரியது; காத்தல் நின்கடன்'' என்று
கூறிக் கூஉய்க் கரையெய்தி ஏறினேன்; அக் கலம் சென்று சார்ந்து இருத்தலும்,
பூங்கொடி பொருந்தி மகிழ்வெய்தி வலஞ்செய்து, ''பீடிகை இது'' எனக் காட்ட,
மன்னவன் வலங்கொண்டு ஏத்தினன்; அவனுக்கப் பீடிகை பிறவியைக் காட்ட, மன்னவன்
''மறந்து வாழேன்'' என்று எத்தி, மணிமேகலையுடன் எழுந்து சென்று இருப்ப, தெய்வதம்
கண்டு வந்தெய்தி, ''பெரியோய், வந்தனை; உடலென்பு இவைகாண்; என்பு மிவை
காண்; காணாய்; கொன்றாய்; கொன்றாய்; கொற்றவனாயினை; மட வரல்நல்லாய்,
நகர் கடல் வயிறு புக்கது, காரணங் கேளாய்; மணிமேகலா தெய்வம் சாபமிட்டனள்;
இது பட்டது; உலக மன்னவன் போயினன்; தாயரும் புக்கனர்; கேட்க உருகுவையாயின்,
அறவணன்றன்பால் வஞ்சியுட் கேட்பை'' என்று தெய்வம்'' போயபின், மன்னவன்
இரங்கிப் படிவம் நோக்கி மயங்க, மணிமேகலை எழுந்து ''கண்டது இல்'' என காவலன்
உரைக்கும்; அங்ஙனம் உரைப்பவன், ''நீங்கலாற்றேன் யான்'' என, அணியிழை.
''ஏகுதி; செல்வன்'' என்று எழுந்தனள் என, வினை முடிவு செய்க.
ஆபுத்திரனோடு
மணிபல்லவமடைந்த காதை முற்றிற்று.
1
சிலப். 24. தென்னவன்.
|