பக்கம் எண் :

பக்கம் எண் :385

Manimegalai-Book Content
26. வஞ்சிமா நகர் புக்க காதை


10 





15





20





25





30





35





40

அருளல் வேண்டுமென் 1 றழுது முன்னிற்ப
 ஒருபெரும் பத்தினிக் கடவுளாய் குரைப்போள்

எம்மிறைக் குற்ற விடுக்கண் பொறாது
வெம்மையின் மதுரை வெவ்வழற் படுநாள்
மதுரா பதியெனு மாபெருந் தெய்வம்
இதுநீர் முன்செய் வினையின் பயனால்
 காசில் பூம்பொழிற் கலிங்கநன் னாட்டுத்

தாய மன்னவர் வசுவுங் குமரனும்
சிங்க புரமுஞ் செழுநீர்க் கபிலையும்
அங்காள் கின்றோ ரடற்செரு வுறுகாள்
மூவிரு காவத முன்னுந ரின்றி
 யாவரும் வழங்கா விடத்திற் பொருள்வேட்டுப்

பல்கலன் கொண்டு பலரறி யாமல்
எல்வளை யாளோ டரிபுர மெய்திப்
பண்டக் கலம்பகர் சங்கமன் றன்னைக்
கண்டனர் கூறத் தையனின் கணவன்
 பார்த்திபன் றொழில்செயும் பரத னென்னும்

தீத்தொழி லாளன் றெற்றெனப் பற்றி
ஒற்ற னிவனென வுரைத்து மன்னற்குக்
குற்றமி லோனைக் கொலைபுரிந் திட்டனன்
ஆங்கவன் மனைவி யழுதன ளரற்றி
 ஏங்கிமெய் பெயர்ப்போ ளிறுவரை யேறி

இட்ட சாபங் கட்டிய தாகும்
உம்மை வினைவந் துருத்தலொழி யாதெனும்
மெய்ம்மைக் கிளவி விளம்பிய பின்னுஞ்
சீற்றங் கொண்டு செழுநகர் சிதைத்தேன்
 மேற்செய்நல் வினையின் விண்ணவர்ச் சென்றேம்

அவ்வினை யிறுதியி னடுசினப் பாவம்
எவ்வகை யானு மெய்துத லொழியாது
உம்ப ரில்வழி யிம்பரிற் பல்பிறப்பு
யாங்கணு மிருவினை யுய்த்துமைப் போல
 நீங்கரும் பிறவிக் கடலிடை நீந்திப்

பிறந்து மிறந்து முழல்வோம் பின்னர்


(பாடம்.) 1 றழுது ணிற்ப.