பக்கம் எண் :

பக்கம் எண் :386

Manimegalai-Book Content
26. வஞ்சிமா நகர் புக்க காதை





45





50





55





60





65





70





75

மறந்து மழைமறா மகதநன் னாட்டுக்கு
ஒருபெருந் திலகமென் றுரவோ ருரைக்கும்
தரவரும் பெருமைக் கபிலையம் பதியின்
அளப்பரும் பாரமிதை யளவின்று நிறைத்துத்

துளக்கமில் புத்த ஞாயிறு தோன்றிப்
போதி மூலம் பொருந்திவந் தருளித்
தீதறு நால்வகை வாய்மைந் தெரிந்து
பன்னிரு சார்பின் பகுதித் தோற்றமும்
அந்நிலை யெல்லா மழிவுறு வகையும்

இற்றென வியம்பிக் குற்றவீ டெய்தி
எண்ணருஞ் சக்கர வாள மெங்கணும்
அண்ண லறக்கதிர் விரிக்குங் காலைப்
பைந்தொடி தந்தை யுடனே பகவன்
இந்திர விகார மேழுமேத் துதலின்

துன்பக் கதியிற் றோற்றர வின்றி
அன்புறு மனத்தோ டவனறங் கேட்டுத்
துறவி யுள்ளந் தோன்றித் தொடரும்
பிறவி நீத்த பெற்றிய மாகுவம்
அத்திற மாயினு மநேக காலம்

எத்திறத் தார்க்கு மிருத்தியுஞ் செய்குவம்
நறைகமழ் கூந்த னங்கை நீயும்
முறைமையி னிந்த மூதூ ரகத்தே
அவ்வவர் சமயத் தறிபொருள் கேட்டு
மெய்வகை யின்னும் நினக்கே விளங்கிய

பின்னர்ப் பெரியோன் பிடகநெறி கடவாய்
இன்னதிவ் வியல்பெனத் தாயெடுத் துரைத்தலும்
இளையள் வளையோ ளென்றுனக் கியாவரும்
விளைபொரு ளுரையோர் வேற்றுருக் கொள்கென
மையறு சிறப்பிற் றெய்வதந் தந்த

மந்திர மோதியோர் மாதவன் வடிவாய்த்
தேவ குலமுந் தெற்றியும் பள்ளியுன்
பூமலர்ப் பொழிலும பொய்கையு மிடைந்து
நற்றவ முனுவருங் கற்றடங் கினரும்
நன்னெறி காணிய தொன்னூற் புலவரும்

எங்கணும் விளங்கிய வெயிற்புற விருக்கையில்