80
85
90
1--9
|
செங்குட் டுவனெனுஞ் செங்கோல் வேந்தன
பூத்த வஞ்சி பூவா வஞ்சியில்
போர்த்தொழிற் றானை குஞ்சியிற் புனைய
நிலநா டெல்லைதன் மலைநா டென்னக்
கைம்மலைக் களிற்றனந் தம்முண் மயங்கத்
தேரு மாவுஞ் செறிகழன் மறவரும்
கார்மயங்கு கடலிற் கலிகொளக் கடைஇக்
கங்கையம் பேரியாற் றடைகரைத் தங்கி
வங்க நாவியி னதன்வடக் கிழிந்து
கனக விசயர் முதற்பல வேந்தர்
அனைவரை வென்றவ ரம்பொன் முடிமிசைச்
சிமைய மோங்கிய விமைய மால்வரைத்
தெய்வக் கல்லுந் தன்றிரு முடிமிசைச்
செய்பொன் வாகையுஞ் சேர்த்திய சேரன்
விற்றிறல் வெய்யோன் றன்புகழ் விளங்கப்
பொற்கொடிப் பெயர்ப்படூஉம் பொன்னகர்ப் பொலிந்
திருந்துநல் லேது முதிர்ந்துள தாதலிற் [தனள்
பொருந்துநால் வாய்மையும் புலப்படுத் தற்கென்.
உரை
அணியிழை அந்தரம் ஆறா எழுந்து-மணிமேகலைவிசும்பின்வழியாக
எழுந்து சென்று வஞ்சி நகரத்தின் புறத்தே இறங்கி, தணியாக் காதல் தாய கண்ணகியையும்-குறையாத
அன்புடையளாகிய அன்னை கண்ணகியையும், கொடைகெழுதாதை கோவலன் தன்னையும்-ஈதற்றன்மை
மிக்குடையானாகிய தந்தை கோவலனையும், கடவுள் எழுதிய படிமம் காணிய - தெய்வமாக
எழுதியமைக்கப்பட்ட வடிவத்தைக் காணும் பொருட்டு, வேட்கை துரப்பக் கோட்டம்
புகுந்து - ஆசை மேன்மேலுந் தூண்டுதலால் அக் கோயிலிற் புகுந்து, வணங்கி நின்று
குணம் பல ஏத்தி - வணக்கஞ் செய்து நின்று அவளுடைய சிறந்த குணங்கள் பலவற்றையும்
எடுத்துத் துதித்து, அற்புக்கடன் நில்லாது நற்றவம் படராது - அன்பாகிய கடனிலே
நில்லாமலும் நல்ல தவநெறியில் செல்லமாலும், கற்புக் கடன் பூண்டு நுங்கடன்
முடித்தது - கற்பினையே கடனாக மேற் கொண்டு நுமது கடனை முடித்ததன் காரணத்தை,
அருளல் வேண்டும் என்று அழுது முன்நிற்ப-உரைத்தருள வேண்டும் என்று கூறியழுது கண்ணகி
திருமுன் நிற்ப;
|