பக்கம் எண் :

பக்கம் எண் :390

Manimegalai-Book Content
26. வஞ்சிமா நகர் புக்க காதை

மெய் பெயர்த்தல்-உடம்பினின்றும் உயிரை நீக்குதல். இறுவரை-பெரிய மலை; 1 ''''இறுவரை இவர்வதோ ரிலங்கெயிற் றரியென'''' என்பது காண்க. உம்மைவினை - பழவினை. உருத்தல் - தோன்றுதல்; ஈண்டுப் பற்றுதல். மாபெருந் தெய்வம் விளம்பிய பின்னும் என்க. இச் சாப வரலாறு 2 ''''கடிபொழி லுடுத்த கலிங்கநன் னுாட்டு, வடிவேற் றடக்கை வசுவுங் குமரனும்...வழுவில் சாபம்பட்டனிர்'''' என இளங்கோ வடிகள் உரைத்திருத்தலானும் நன்கறியப்படும்.

35-53.   மேற்செய் நல்வினையின் விண்ணவர்ச் சென்றேம் - முன் செய்த நல்வினைப் பயனால் யானும் என் கணவனும் தேவராகச் சென்றோம். அவ் வினை இறுதியின் அடுசினப் பாவம் எவ்வகையானும் எய்துதல் ஒழியாது-அந் நல்வினையின் முடிவில் கொடிய சீற்றத்தா லுண்டாகிய பாவமானது எவ்வாறாயினும் அடைதலின் நீங்காது, உம்பர் இல்வழி இம்பரில் பல் பிறப்பு யாங்கணும் இருவினை உய்த்து-உம்பருலகினில் நல்வினை நுகர்ச்சி யில்லாதவிடத்து இவ்வுலகில் எல்லாப் பிறப்பின்கண்ணும் இருவினைகளினாலே செலுத்தப்பட்டு, உமைப்போல நீங்கரும் பிறவிக் கடலிடை நீந்திப் பிறந்தும் இறந்தும் உழல்வோம் பின்னர் - உங்களைப்போலவே பின்பு நீங்குதற்கரிய பிறவிப் பெருங் கடலின்கண் நீந்திப் பிறந்தும் இறந்தும் வருந்துவோம், மறந்தும் மழை மறா மகத நன்னாட்டுக்கு ஒரு பெருந் திலகம் என்று உரவோர் உரைக்கும்-மறந்தும் மழைபெய் தலிற் றவிராத மகத நன்னாட்டிற்கு ஒப்பற்ற பெரிய திலகம் போல் வது என்று அறிஞர்களாற் கூறப்படும், கரவரும் பெருமைக் கபிலையம் பதியில்-மறைத்தற்கரிய பெருமையையுடைய கபிலை என்னுந் திருப்பதியில், அளப்பரும் பாரமிதை அளவின்று நிறைத்து-அளத்தற்கரிய பாரமிதைகளை அளவில்லாமல் நிரப்பி, துளக்கமில் புத்தஞாயிறு தோன்றி-அசைவற்ற புத்தினாகிய ஞாயிறு உதித்து, போதி மூலம் பொருந்தி வந்தருளி - அரசமரத்தினடியில் எழுந்தருளியிருந்து, தீதறு நால்வகை வாய்மையுந் தெரிந்து - தீமையற்ற நான்கு வகை உண்மைகளையுந் தெளிந்து, பன்னிரு சார்பின் பகுதித் தோற்றமும்-பேதைமை முதலிய பன்னிரு நிதானங்களின் தோற்றத்தையும், அந் நிலை எல்லாம் அழிவுறு வகையும் - அப் பன்னிரு சார்பும் கெடும் வகையையும், இற்றென இயம்பிக் குற்ற வீடெய்தி - இத்தன்மைத்து என எடுத்துக்கூறிக் காம முதலிய குற்றங்களினின்றும் ''வீடுபெற்று, எண்ணருஞ் சக்கரவாளம் எங்கணும் அண்ணல் அறக்கதிர் விரிக்கும் காலை - உலகமுழுவதும் தலைமையையுடைய அளவிறந்த அறங்களாகிய கிரணங்களைப் பரப்பும்பொழுது;

விண்ணவர்ச் சென்றேம்-விண்ணவராகிச் சென்றே மென்க. அடு சினப் பாவம்-மதுரையை அழித்த சினமாகிய பாவம்; 3 ''''தன்னையே


1 சீவக. 1833. 27. 2 சிலப். 23 : 3 குறள். 305: