பக்கம் எண் :

பக்கம் எண் :391

Manimegalai-Book Content
26. வஞ்சிமா நகர் புக்க காதை

கொல்லுஞ் சினம்'''' என்பவாகலின் அடு சினம் எனப்பட்ட தென்றலுமாம். இருவினை உய்த்து - இருவினையாற் செலுத்தப்பட்டு. திலகம் - திலகம் போல்வது; மேலாயது. கபிலை - கபிலைநகர்; மகதநாட்டின் தலைநகர்; கபிலர் எனப் பெயரிய முனிவரொருவர் முன்பு தவஞ் செய்தற்கு இடமாயிருந்தமையின் இப்பெயர் பெற்றதென்பர். இது கபில வஸ்து எனவும் வழங்கும். பாரமிதை - கரையை அடைவதற்குரியது; பாரம் - கரை; வீடுபேறாகிய கரையை அடைதற்குரிய தானம், சீலம், பொறை, வீரியம், தியானம், உணர்ச்சி, உபாயம், அருள்., வலி, ஞானம் என்னும் பத்தும் நிரம்பப் பெறுதல். இவை ஒவ்வொன்றும் தானபாரமிதை முதலிய பெயர்களால் வழங்கும். இவை தசபாரமிதை யெனவும், தசபாரமெனவும் கூறப்படும். 1 ''''தானஞ் சீலம்பொறை தக்கதாய வீரியம், ஊனமிஃறியானமே யுணர்ச்சியோ டுபாயமும், மானமில் லருளினை வைத்தலேவ லிம்மையும், ஞானமீரைம் பாரமிதை நாடுங்கா லிவைகளும்'''' 2 ''''தானமே முதலாகத் தசபாரம் நிறைத்தருளி, ஊனமொன் றில்லாமை யொழிவின்றி யியற்றினையே'''' என்பன காண்க. போதி - அரசமரம்; என்றது மாபோதியை. நால் வகை வாய்மை - துயரம், துயரத் தோற்றம், துயர நீக்கம், துயர நீக்க நெறி என்பன. பன்னிரு சார்பு - 3 ''''பேதைமை செய்கை உணர்வே அருவுரு, வாயில் ஊறே நுகர்வே வேட்கை, பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்'''' என்பன. இற்று என்பதனைத் தோற்றத்தோடும் வகை யோடும் தனித்தனி கூட்டுக. அண்ணல் - தலைமை. புத்தனை ஞாயிறாக உருவகித்ததற்கேற்ப அவன் அறிவுறுத்தும் அறங்களைக் கதிராக உருவகஞ் செய்தார். புத்த ஞாயிறு நிறைத்துத் தோன்றி வந்தருளித் தெரிந்து இயம்பி எய்தி விரிக்குங்காலை யென்க.

54-9.   பைந்தொடி தந்தையுடனே பகவன் இந்திர விகாரம் ஏழும் ஏத்துதலின் - நின் தந்தையுடனே யான் புத்தனது இந்திர விகாரங்கள் ஏழனையும் வணங்கித் துதித்த நல்வினையினாலே, துன்பக் கதியில் தோற்றரவு இன்றி - இன்னல் தரும் இழி பிறப்பிலே தோன்றுதலின்றி, அன்புறு மனத்தோடு அவன் அறம் கேட்டு - அன்பு மிகுந்த உள்ளத்துடன் புத்தனது அறவுரைகளைக் கேட்டு, துறவி உள்ளம் தோன்றி - உள்ளத்தே துறவு தோன்றி, தொடரும் பிறவிநீத்த பெற்றியம் ஆகுவம் - தொடர்ந்து வரும் பிறவியை நீக்கிய இயல்பினை யுடையேமாவேம்;

பைந்தொடி: முன்னிலைப் பெயர். பகவன் - புத்தன். விகாரம் - கையாற்செய்யப்படாது நினைவினால் ஆக்கப்பட்டது. இந்திர விகாரம்- ஏழு - காவிரிப்பூம் பட்டினத்திலே இந்திரனால் நிறுமிக்கப்பட்ட ஏழ் அரங்குகள்; விசும்பிலியங்குவோராகிய சாரணர் இருந்து, பௌத்தா


1 நீல. மொக்கல. 88. 2 வீர. யாப்பு. 11-உதாரணம். 3 மணி. 24 : 105-7.