கமப் பொருளை யாவர்க்கும் அறிவுறுத்துதற்கு இடமாக இருப்பவை; இதனை 1
''''பணையைந் தோங்கிய பாசிலைப் போதி, அணிதிகழ் நீழ லற வோன் றிருமொழி,
அந்தர சாரிக ளறைந்தனர் சாற்றும், இந்திர விகார மேழுடன் போகி'''' என்பதனால்
உணர்க. ''ஏத்துதலின்'' என ஈண்டுக் கூறியதனால், கோவலனும் கண்ணகியும் புகார்நகரி
லிருந்தபொழுது இவற்றை வழிபட்டார்களென்பது போதரும். தோற்றரவு - தோன்றுதல்;
தொழிற்பெயர்; துன்பக் கதியில் தோன்றுதலின்றி என்பதனால் நற்கதியிற்
பிறத்தல் பெற்றாம். துறவி - துறவு; திருச்சிற்றம்பலக் கோவையார் உரையில்
பேராசிரியர் 2 ''''துறவு
துறவியென நின்றாற் போல அளவு அளவியென நின்றது'''' என எழுதியுள்ளமை காண்க.
பெற்றி யென்றது நிருவாணத்தை.
60-1. அத்திறமாயினும் அநேக காலம் எத்திறத்தார்க்கும்
இருத்தியும் செய்குவம் - அவ்வாறு ஆவேமாயினும் பல காலங்கள் எவ் வகைப்பட்டோர்க்கும்
சித்தியும் செய்வோம்; இருத்தி - சித்தி.
இதனை ரிதி யென்றும், இது
பரிணாமிகம், நிருமாணிகமென விருகைத்தென்றும், ஒவ்வொன்றும் முறையே பதினாறும்
இரண்டுமாய் விரியுமென்றும் பௌத்த நூல்கள் கூறுகின்றன.
62-7. நறை கமழ் கூந்தல் நங்கை நீயும் - மணங்
கமழும் குழலினை யுடைய மணிமேகலையே நீயும், முறைமையின் இந்த மூதூர் அகத்தே-இத்தொன்னகரின்கண்
முறையாக, அவ்வவர் சமயத்து அறிபொருள் கேட்டு - சமயவாதிகளிடம் அவரவர் சமயங்களின்
அறிந்த பொருள்களைக் கேட்டு, மெய் வகை இன்மை நினக்கே விளங்கிய பின்னர்
- அவற்றுள் மெய்த்திறம் இல்லாமை நினைக்கே விளங்கிய பின், பெரியோன்
பிடக நெறி கடவாய் - புத்தனருளிச் செய்த ஆகமங்களின் வழியைக் கடவாயாவாய்,
இன்னது இவ்வியல்பு என - மேல் நிகழும் முறைமை இதுவாகு மென்று, தாய் எடுத்து உரைத்தலும்
- தாயாகிய பத்தினிக் கடவுள் கூறுதலும்;
மூதூர் என்றது வஞ்சி நகரத்தை.
பிடகம் - பௌத்தாகமம்; இது வினயம், சூத்திரம், சாத்திரம் என மூவகைப்படுதலின்
திரிபிடகம் எனவும் படும். மூன்றுள் ஒவ்வொன்றும் பல பகுதிகளை யுடையதாம்.
68-74. இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும்
விளைபொருள் உரையார் வேற்றுருக் கொள்க என - இவள் இளமையுடைய வளை யணிந்த
பெண்ணாவாள் என்று நினக்கு யாவரும் தம் சமய உண்மைகளைக் கூறார் ஆதலின் நீ
வேற்றுருவங் கொள்க என்று, மையறு சிறப்பின் தெய்வதம் தந்த-களங்கமற்ற சிறப்பினை
யுடைய மணிமேகலா தெய்வங் கொடுத்த, மந்திரம் ஓதி ஓர் மாத
1
சிலப். 10 : 11-4. 2
திருச்சிற்.
10.உரை.
|