வன் வடிவாய் - மந்திரத்தை ஓதி ஒரு தாபதன் வடிவாகி, தேவ குலமும் தெற்றியும்
பள்ளியும் பூமலர்ப் பொழிலும் பொய்கையும் மிடைந்து-கடவுளர் கோயிலும் வேதிகையும்
சாலையும் அழகியபூஞ் சோலையுங் வாவியும் நெருங்கி, நற்றவ முனிவரும் கற்றடங்கினரும்-
நற்றவம் புரிந்த முனிவரும் மறைநூல் பயின்று அதனான் அமைந்த அறவோரும், நன்னெறி
காணிய தொன்னூற் புலவரும்-அறநெறி கடைப்பிடித்த பண்டைநூற் பயிற்சி மிக்க
புலவரும், எங்கணும் விளங்கிய-எங்கும் இருந்து விளங்கிய, எயிற்புற இருக்கையில்
- புறமதிலின் புறத்துள்ள இருக்கையினையுடைய ;
மந்திரம் - வேற்றுருவெய்துவிக்கும்
மந்திரம். குலம் - கோயில். பள்ளி - சாலை; இதனைத் 1
''''திணிமணற் புதுப்பூம் பள்ளி'''' என்னும் புறநானூற்றினுங் காண்க. மறுமை கருதித்
தவஞ் செய்தலைத் தவம் என்றும், வீடு கருதிச் செய்தலை நற்றவம் என்றும் வழங்குதல்,
2 ''''நற்றவஞ் செய்வார்க்கிடம்
தவஞ் செய்வார்க்கும் அஃதிடம்'''' என்னுஞ் சிந்தாமணியினாற் பெறப்படுதலின்,
ஈண்டு ''நற்றவ முனிவர்'' என்று விதந்தது பயன் கருதாது தவம் முயலும் முனிவரரை என்க.
தேவ குலம் முதலியன மிடைந்து முனிவர் முதலியோர் விளங்கிய இருக்கை என்பது.
77. செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன் -
செங்குட்டுவன் என்னும் செங்கோலரசனாகிய சேரர் பெருமானும்;
செங்குட்டுவன், பெயர்; இவன்,
ஆசிரியர் இளங்கோவடிகளின் தமையனும் வஞ்சிமாநகரிற் கண்ணகி படிமம் நிறுவியோனுமாவன்.
78-90. பூவா வஞ்சியில் - பூவல்லா வஞ்சியாகிய
நகரத்தில், பூத்தவஞ்சி போர்த்தொழில் தானை குஞ்சியில் புனைய-போர் வினையை
மேற்கொண்ட சேனைகளை வஞ்சிப்பூவைத் தமது முடியிலே சூட, நில நாடு எல்லை தன்
மலை நாடு என்ன கைம்மலைக் களிற்றினம் தம்முள் மயங்க-செல்லும் நிலத்தின்கண்
உள்ள நாடுகளின் பரப்பு முழுதும் தனது மலைநாடென்று தோற்றும்படி துதிக்கையைப்
பொருந்திய மலைகளைப் போன்ற யானைகள் தம்முள் ஒருங்கு சேர்ந்து செல்ல, தேரும்
மாவும் செறிகழல் மறவரும் கார்மயங்கு கடலின் கலிகொள - தேருங் குதிரையும்
நெருங்கிய வீரக்கழ லணிந்த வீரரும் முகிலுடன் கூடிய கடல்போல முழங்க, கடைஇ-
அவற்றைச் செலுத்தி, கங்கையம் பேர்யாற்று அடைகரைத் தங்கி- கங்கைப் பெருநதியின்
அடைகரையில் தங்கி, வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து-வங்கம் என்னும்
ஒருவகை மரக்கலத்தின் உதவியால் அந்நதியின் வடகரையில் இறங்கி, கனகவிசயர்
முதற் பல வேந்தர் அனைவரை வென்று - கனகன் விசயன் முதல் உத்தரன்
1
புறம். 33. 2 சீவக:
76.
|