முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
பக்கம் எண் :401
Manimegalai-Book Content
27. சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
155
160
165
170
175
180
பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும்
என்றிவ் வாறு பிறப்பினு மேவிப்
பண்புறு வரிசையிற் பாற்பட்டுப் பிறந்தோர்
1
கழிவெண் பிறப்பிற் கலந்துவீ டணைகுவர்
அழியல் வேண்டா ரதுவுறற் பாலார்
இதுசெம் போக்கி னியல்பிது தப்பும்
அதுமண் டலமென் றறியல் வேண்டும்
2
பெறுதலு மிழத்தலு மிடையூ றுறுதலும்
உறுமிடத் தெய்தலுந் துக்கசுக முறுதலும்
பெரிதவை நீங்கலும் பிறத்தலுஞ் சாதலும்
கருவிற் பட்ட பொழுதே
3
கலக்கும்
இன்பமும் துன்பமும் இவையுமணு வெனத்தகும்
முன்னுள வூழே பின்னுமுறு விப்பது
மற்கலி நூலின் வகையிது வென்னச்
சொற்றடு மாற்றத் தொடர்ச்சியை விட்டு
நிகண்ட வாதியை நீயிரை நின்னாற்
புகழுந் தலைவன்யார் நூற்பொருள் யாவை
அப்பொரு ணிகழ்வுங் கட்டும் வீடும்
மெய்ப்பட விளம்பென விளம்ப லுறுவோன்
இந்திரர் தொழப்படு மிறைவனெம் மிறைவன்
தந்த நூற்பொரு டன்மாத்தி காயமும்
அதன்மாத்தி காயமுங் காலா காயமும்
தீதில் சீவனும் பரமா ணுக்களும்
நல்வினை யுந்தீ வினையுமவ் வினையாற்
செய்வுறு பந்தமும் வீடுமித் திறத்த
ஆன்ற பொருடன் றன்மைய தாயும்
தோன்றுசார் வொன்றின் றன்மைய தாயும்
அநித்தமு நித்தமு மாகி நின்று
நுனித்த குணத்தோர் கணத்தின் கண்ணே
தோற்றமு நிலையுங் கேடு மென்னும்
மாற்றரு மூன்று மாக்கலு முரித்தாம்
நிம்ப முளைத்து நிகழ்த னித்தியம்
1
கழிவேய் பிறப்பிற்.
2
இறத்தலு மிழத்தலும்.
3
பிறக்கும்.
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்