|
185
190
195
200
205
210
215
|
நிம்பத் தப்பொரு ளன்மை யநித்தியம
பயற்றுத் தன்மை கெடாதுகும் மாயம்
இயற்றி யப்பய றழிதலு மேதுத்
தருமாத்தி காயந் தானெங்கு முளதாய்ப்
பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமா
அப்படித் தாகிய தன்மாத்தி காயமும்
எப்பொருள் களையு நிறுத்த லியற்றும்
காலங் கணிக மெனுங்குறு நிகழ்ச்சியும்
ஏலுங் கற்பத் தின்னெடு நிகழ்ச்சியும்
ஆக்குமா காய மெல்லாப் பொருட்கும்
பூக்குமிடங் கொடுக்கும் புரிவிற் றாகும்
சீவ னுடம்போ
1
டொத்துக்
கூடித்
தாவில்சுவை முதலிய புலன்களை நுகரும்
ஓரணு புற்கலம் புறவுரு வாகும்
சீர்சா னல்வினை தீவினை யாவைசெயும்
வருவழி யிரண்டையு மாற்றி முன்செய்
அருவினைப் பயனனு பவித்தறுத் திடுதல்
அதுவீ டாகு மென்றன னவன்பின்
இதுசாங் கியமத மென்றெடுத் துரைப்போன்
தனையறி வரிதாய்த் தான்முக் குணமாய்
மனநிகழ் வின்றி மாண்பமை பொதுவாய்
எல்லாப் பொருளுந் தோன்றுதற் கிடமெனச்
சொல்லுதன் மூலப் பகுதிசித் தத்து
மானென் றுரைத்த புத்தி வெளிப்பட்
டதன்கணா காயம் வெளிப்பட் டதன்கண்
வாயு வெளிப்பட் டதன்க ணங்கி
யானது வெளிப்பட் டதன்க ணப்பின்
தன்மை வெளிப்பட டதின்மண் வெளிப்பட்
டவற்றின் கூட்டத் தின்மனம் வெளிப்பட்
டார்ப்புறு மனத்தாங் கார விகாரமும்
ஆகா யத்திற் செவியொலி விகாரமும்
வாயுவிற் றொக்கு மூறெனும் விகாரமும்
அங்கியிற் கண்ணு மொளியுமாம் விகாரமும்
|