பக்கம் எண் :

பக்கம் எண் :403

Manimegalai-Book Content
27. சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
 




220





225






230





235




240





245

தங்கிய வப்பில்வாய் சுவையெனும் விகாரமும்
நிலக்கண் மூக்கு நாற்ற விகாரமும்
சொலப்பட் டிவற்றிற் றொக்கு விகாரமாய்
வாக்குப் பாணிபாத பாயுரு பத்தமென

ஆக்கிய விவைவெளிப் பட்டிங் கறைந்த
பூத விகாரத் தான்மலை மரமுதல்
ஓதிய வெளிப்பட் டுலகாய் நிகழ்ந்து
வந்த வழியே யிவைசென் றடங்கி
அந்தமில் பிரளய மாயிறு மளவும்

ஒன்றா யெங்கும் பரந்துநித் தியமாம்
அறிதற் கெளிதாய் 1 முக்குண மன்றிப்
பொறியுணர் விக்கும் 2 பொதுவு மன்றி
எப்பொரு ளுந்தோன் றுதற்கிட மன்றி
அப்பொரு ளெல்லா மறிந்திடற் குணர்வாய

ஒன்றா யெங்கும் பரந்துநித் தியமாய்
நின்றுள வுணர்வாய் நிகழ்தரும் புருடன்
புலமார் பொருள்க ளிருபத் தைந்துள
நிலநீர் தீவளி யாகா யம்மே
மெய்வாய் கண்மூக் குச்செவி தாமே

உறுசுவை யொளியூ றோசைநாற் றம்மே
வாக்குப் பாணி பாதபாயு ருபத்தம்
ஆக்கு மனோபுத்தி யாங்கார சித்தம்
உயிரெனு மான்மா வொன்றொடு மாமெனச்
செயிரறச் செப்பிய திறமுங் கேட்டு

வைசே டிகநின் வழக்குரை யென்னப்
பொய்தீர் பொருளும் குணமும் கருமமும்
சாமா னியமும் விசேடமும் கூட்டமும்
ஆமாறு கூறா மதிற்பொரு ளென்பது
குணமுந் தொழிலு முடைத்தா யெத்தொகைப்

பொருளுக்கு மேதுவா மப்பொரு ளொன்பான்
ஞாலநீர் தீவளி யாகா யந்திசை
கால மான்மா மனமிவற் றுண்ணிலம
ஒலியூறு நிறஞ்சுவை நாற்றமொ டைந்தும


1 முக்குணமின்றி.    2 பொருளுமின்றி.