பக்கம் எண் :

பக்கம் எண் :404

Manimegalai-Book Content
27. சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
 

250





255





260





265





270





275





280


பயில்குண முடைத்து நின்ற நான்கும

சுவைமுத லொரோகுண மவைகுறை வுடைய
ஓசை யூறு நிறநாற் றஞ்சுவை
மாசில் பெருமை சிறுமை வன்மை
மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம்
என்னு நீர்மை பக்கமுத லனேகம்

கண்ணிய பொருளின் குணங்க ளாகும்
பொருளுங் குணமுங் கரும மியற்றற்
குரிய வுண்மை தருமுதற் பொதுத்தான்
போதலு நிற்றலும் பொதுக்குண மாதலிற்
சாதலு நிகழ்தலு மப்பொருட் டன்மை

ஒன்றணி கூட்டங் குணமுங் குணியுமென்
றொன்றிய வாதியு முரைத்தன னுடனே
பூத வாதியைப் புகனீ யென்னத்
தாதகிப் பூவுங் கட்டியு மிட்டு
மற்றுங் கூட்ட மதுக்களி பிறந்தாங

குற்றிடு பூதத் துணர்வு தோன்றிடும்
அவ்வுணர் வவ்வப் பூதத் 1 தழிவுகளின்
வெவ்வேறு பிரியும் பறையோ சையிற்கெடும்
உயிரொடுங் கூட்டிய வுணர்வுடைப் பூதமும்
உயிரில் லாத வுணர்வில் பூதமும்

அவ்வப் பூத வழியவை பிறக்கும்
மெய்வகை யிதுவே வேறுரை விகற்பமும்
உண்மைப் பொருளு முலோகாயத னுணர்வே
கண்கூ டல்லது கருத்தள வழியும்
இம்மையு மிம்மைப் பயனுமிப் பிறப்பே

பொய்ம்மை மறுமையுண் டாய்வினை துய்த்தல்
என்றலு மெல்லா மார்க்கமுங் கேட்டு
நன்றல வாயினு நான்மா றுரைக்கிலேன்
பிறந்தமுற் பிறப்பை யெய்தப் பெறுதலின்
அறிந்தோ ருண்டோ 2 வென்றுநக் கிடுதலும்

தெய்வ மயக்கினுங் கனாவுறு திறத்தினும்
மைய லுறுவோர் மனம்வே றாம்வகை


1 தழிவின்;     2 வெனநக்கிடுதலும்.