பக்கம் எண் :

பக்கம் எண் :406

Manimegalai-Book Content
27. சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
 

கொண்டன ரென்பதாம். பிற்காலத்தே சைமினி யெழுதியது பூருவ மீமாஞ்சை யென்றும், வாதராயண ரெழுதியது உத்தரமீமாஞ்சை யென்றும் வழங்கலாயின வெனக்கொள்க. விரிந்தது தொகுத்தல் அவ்வக் காலத்துக்கும் மக்கள் அறிவு வளர்ச்சிக்கும் பண்பாதலின், "பண்புறப்பகர்ந்திட்டனர்" என்றான் ; முன்னோரை நோக்கப் பின்னோர் ஒரு சில அளவைகளைக் குறைத்துக்கொண்டாராயினும், அளத்தற்குரிய பொருள் எஞ்சாமல் அளக்கப்பட்ட தென்பதும் "பண்புற" என்றதனாற் பெற்றாம்.

1. பிரமாணங்கள்

9--13. காண்டல் - காட்சியளவையும் ; கருதல்-அனுமான வளவையும்; உவமம்-உவமையளவையும்; ஆகமம்-ஆகம வளவையும்; ஆண்டைய அருத்தாபத்தியோடு - ஆங்கு அவற்றோடு கூறப்படும் அருபத்தாபத்தியளவையும் ; இயல்பு - இயல்பு அளவையும்; ஐதிகம்-ஐதிக வளவையும் ; அபாவம் - அபாவ வளவையும் ; மீட்சி ஒழி வறிவு - மீட்சியாலறியும் ஒழிபளவையும்; எய்தி உண்டாம் நெறி - தோன்றியுளதாய் நிகழும் சம்பவ வளவையும்; என்ற இவை தம்மால் - என்று கூறப்பட்ட இப்பத்தாலும்; பொருளின் உண்மை புலங்கொளல் வேண்டும் - பொருளின் உண்மைத் தன்மையையறிதல் வேண்டும் எ - று.

காண்டல் முதல் ஆகம மீறாகக் கூறிய நான்கினையும் சிறப்புடையவாகவும் ஏனையவற்றை யத்துணைச் சிறப்பியல்லனவாகவும் சில ஆசிரியன்மார் கோடலின், "ஆண்டைய அருத்தாபத்தியோடு" என்று பிரித்தோதினார். ஓடு: எண்ணுப்பொருட்டு. பாரிசேடத்தை, மீட்சி யொழிவு அறிவு என விளக்கினார். சம்பவ வளவை, தோன்றி நின் றியலுவதைக் காட்டலின், "எய்தியுண்டா நெறி" யென்றார். "இவை தம்மாற் பொருளி னுண்மை புலங்கொளல் வேண்டும்" என்றது. இவற்றால் விளையும் பயன் உணர்த்தி நின்றது. காட்சியைப் பிரத்தியக்கமென்றும், கருதலைக் கருத்தென்றும் அனுமானமென்றும், ஆகமத்தைச் சத்தமென்றும், இயல்பைச் சுபாவமென்றும், அபாவத்தை இன்மையென்றும், மீட்சியைப் பாரிசேட மென்றும் கூறுப. புலங்கொளல், ஒரு சொல்லாய் அறிதலென்பது பட நின்றது; பிறாண்டும் இதுவே கூறிக்கொள்க. வியாதன் கூறிய பத்தையும் ஈண்டுக் கூறி, சைமினி கூறிய ஆறினையும் அளவை வாதத்தின் இறுதியிற் (13--4) கூறி யொழிதலின், 1கிருதகோடி கொண்ட எட்டும் தாமே பெறப்படுதலின், அவற்றைக் கூறாதொழிந்தார். எஞ்சி நிற்கும் சுபாவம், ஐதிகம், பாரிசேடம், சம்பவம் என்ற நான்கனுள், அவரால் விலக்குண்ட இரண்டும் இன்னவையெனத்



1 இக் கிருதகோடி யென்பாரது வரலாறு இதுகாறும் ஆராய்ச்சிக்கு நன்கு விளங்கவில்லை.