|
தெரிந்திலவாயினும், சுபாவம், பாரிசேடம் என்ற இரண்டுக்கும் விலக்குண்டனபோலும்
எனக் கருதுவதற்கு இடமுண்டு.
1.
காட்சியளவை
14--24.மருளில் காட்சி ஐவகையாகும்-மருட்சிக்குச் சிறிதும்
ஏதுவாகாத காட்சி யளவை யைந்து வகைப்படும்: கண்ணால் வண்ணமும்-பொறியால் நிறமும்;
செவியால் ஓசையும்-செவிப் பொறியால் ஓசையும்; நண்ணிய மூக்கால் நாற்றமும்-பொருந்திய
மூக்காகிய பொறியால் நாற்றமும்; நாவாற் சுவையும்-நாக்காகிய பொறியால் சுவையும்;
மெய்யால் ஊறும் என - மெய்யாகிய பொறியால் ஊறும் என்று; சொன்ன இவை இவை-சொல்லப்பட்ட
இவற்றை; கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று-முறையே கண்டும்கேட்டும் மோந்தும்
உண்டும் மெய்யுற்றும்; துக்கமும் சுகமும் என - துக்கமென்றும் சுகமென்றும்; துயக்கற
அறிந்து - குற்றமற வறிந்து; உயிரும் வாயிலும் மனமும் - உயிரும் இந்திரியங்களும்
மனமும்; ஊறின்றி - குற்றமின்றி, பயில் ஒளியொடு - உலகிற் பயில நிலவும்
ஞாயிறு திங்கள் தீ என்ற இவற்றின் ஒளி துணையாக ; பொருள் இடம் பழுதின்றி-பொருளும்
இடமும் குற்றமற இயைய வைத்து, சுட்டல்-பொருண்மை மாத்திரம் காண்டலும்; திரிதல்-பிறிதொன்றாகக்
கோடலும்; கவர்கோடல்-ஐயுறுதலும்; தோன்றாது-இல்லாமல்; கிட்டிய தேசம் நாமம்
சாதிகுணம் கிரியைபின் அறிவதாகும்-சார்ந்துள்ள இடம் பெயர் சாதி குணம் தொழில்
என்பவற்றாற் சிறப்பித்தறிவதாம் எ - று.
எனவே, பொறிவாயிலாகப்
பொருள்களின் நலந் தீங்கு காண்டல் காட்சி யளவையின் பயனாமென்றும், காட்சி
நிகழுமிடத்து, உயிரும் பொறிகளும் மனமும், ஒளிநிலவும் பொருளும் இடமும் நோக்கிக்
காணப்படும் பொருளினுடைய பெயர் சாதி குணம் தொழில் முதலியவற்றால் சிறப்புற
அறிதற்கண் தொழிற்படுமென்றும், பொதுமையிற் காண்டல், திரியக் காண்டல்,
ஐயுறல் என நிகழ்தல் கூடாதென்றும் கூறியவாறாம். ஈண்டுக் கூறியனவே கௌதமரால்
ஐவகையாகக் கூறப்படுகின்றன: அவை காணப்படும் பொருளும், ஒளியும், பொறியும்;
மனமும், உயிரும் என்பனவாம். தெளிவுக்காட்சிக்குத் தடையாவன தோடம், சம்பிரயோகம்,
சமுசுகாரம் என்று கூறுவர். தோடமாவது பொறிகளிடத்தேயுள்ள குற்றம் ; சம்பிரயோகமென்பது
ஒரு மருங்கு பற்றிய காட்சி: சமுசுகாரமாவது திரிபுக் காட்சி. இவற்றின் விரிவை
நியாய பிந்து, நியாய மஞ்சரி முதலிய நூல்களுட் காண்க. ஈண்டுக் கூறிய
தோடத்தையே இவ்வாசிரியரும் "ஊறின்றி" யென்றார். "கிட்டிய தேச நாம சாதி
குணங்கிரியை"களைக் கற்பனை யென்பதுடன், இவற்றுள், தேசத்தை நீக்கியும் பொருண்மையைக்
கூட்டியும் நியாய மஞ்சரி என்னும் நூல் கூறுகிறது. ற்பகனையைக்கழித்துக்
காணப்படும்
|