பக்கம் எண் :

பக்கம் எண் :416

Manimegalai-Book Content
27. சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
 

இவற்றோடு பொருந்திய இல்வழக்கும்; உணர்ந்ததை யுணர்தல் மறித்துணர்வும் ; நினைப்பு என - நினைப்பும் என ; நிகழ்வ - நிலவு வனவாகும் ;

மேலே காட்சியளவைக்கு ஆகாவென விலக்கிய சுட்டுணர்வு, திரியக்கோடல், ஐயம் என்றவற்றை ஈண்டும் கூறியது பிரமாணாபாசமாம் இயைபு குறித்து என்க. எட்டுள என்றது, "தொகுத்துச் சுட்டல்"; ஏனைய, "வகுத்து மெய்ந் நிறுத்தல்." தெளிதற்குரிய ஏதுவகையாற் றெளியாது தேறுதல் குற்றமாதலின், தேராத தேற்றத்தைத் "தேராது தெளித" லென்றும், கண்டுணர்தற்குரிய அளவையும் கருவியும்கொண்டு கண்டவழியும் உணராமை அறிவறியாமை யாதலின், அதனைக் "கண்டுணராமை" யென்றும் பண்டேயுணர்ந் திருக்கு மொன்றை மறித்தும் உணர்தல் மிகையாதலின், அதனை "உணர்ந்ததை யுணர்தல்" என்றும் கூறினார். மறதியன் றென்றற்கு "உணர்ந்ததை" என்றார். இது மறித்துணர்வு என்றும் வழங்கும்.

61--2.  சுட்டுணர் வெனப்படுவது - சுட்டுணர்வு என்பது; எனைப் பொருளுண்மை மாத்திரை காண்டல் - எல்லாப் பொருள்களையும் அவற்றின் உண்மை மாத்திரம் கண்டொழிதலாம் எ - று.

குற்றியோ மகனோ தோன்றிய வழி, அக்குற்றி மகன்களின்பெயர் சாதி குணம் தொழில் முதலியன காணாது தோற்றமேபற்றி உளதென்னும் உண்மை மாத்திரம் கண்டொழிதல் என்பதாம்; "பிறிதினை விலக்கலு மாட்டலு மின்றாய், ஒருபொரு ளுரைப்பது சுட்டெனப்படுமே" (நீலகே, 120. உரை. மேற்,) என்பது கருதத்தக்கது. பிற்காலத்தே இது நிருவிகற்பக் காட்சி யெனப்படுவதாயிற்று.

63--4.  திரியக்கோடல் - திரியவுணர்தலென்பது ; ஒன்றை ஒன்றென்றல் - காணப்பட்டதொரு பொருளைப் பிறிதொன்றாகக் கொள்ளுதல் ; விரிகதிர் இப்பியை வெள்ளியென்று உணர்தல் - விரிந்த ஒளிக்கதிர்களையுடைய இப்பியை வெள்ளியென்று உணர்ந்து கொள்வதாம் எ - று.

உணர்வின் திரிபு உணரும் செயன்மேனின்றது ; அருணந்தி சிவனாரும் "திரியவே கொண்டல் திரிவாம்" (சிவ. சித்தி. அள. 3) என்பது காண்க. இப்பியை வெள்ளியென்று திரியக் கோடற்கு ஏது அதனது விரிகதிர்த் தோற்றமாதலின், "விரிகதிர் இப்பியை" என்று சிறப்பித்தார். இதனை விபரீதக் காட்சியென்றும் வழங்குப. "ஒன்றை யொன்றென்றல்" இதன் இலக்கணமெனவும், இப்பியை வெள்ளியென் றுணர்தல் எடுத்துக் காட்டெனவும் கொள்க.

65--6.  ஐயமென்பது - ஐயமென்னும் பிரமாணக் குற்றமாவது ஒன்றை நிச்சயியா மையல்-காணப்பட்டதொன்றை இன்னதெனத் துணியாமைக் கேதுவாய் நிற்கும் மயக்கம் ; தறியோ மகனோ என்றல்-காணப்பட்ட