பக்கம் எண் :

பக்கம் எண் :447

Manimegalai-Book Content
28. கச்சிமாநகர் புக்க காதை
 
       [மணிமேகலை சமயக்கணக்கர் கூறிய திறங்களைக் கேட்டபின் வஞ்சி நகரை நோக்கினாள். அவட்குத் தன் தாய் மாதவி சுதமதி அறவணவடிகள் ஆகிய இவர்கள் நின்வும் உண்டாயிற்று. உடனே வஞ்சி நகர்க்குட் சென்று அதன் புறஞ்சேரியும், அகழும், அரணும், பல்வகைத் தெருக்களும், மன்றமும், பொதியிலும், சந்தியும் சதுக்கமும், செய்குன்றமும், விரைமரக்காவும் பிறவும் கண்டு மகிழ்வுற்றாள். பின்னர் பௌத்த ஞானிகள் உறையும் தவப்பள்ளிடைந்து, அங்கே தவமேற் கொண்டிருந்த மாசாத்துவானைக் கண்டு அவன் திருவடியை வணங்கித் தன் வரலாற்றினை முறையே தெரிவித்தாள். அவனும், தான் கோவலனும் கண்ணகியும் இறந்தமை கேட்டுப் புத்ததருமம் மேற்கொண்ட தாகத் தெரிவித்து, ''கோவலனுக்கு ஒன்பது தலைமுறைக்குமுன்பிருந்த கோவலனென்பான் இந்நகரின்கண் கட்டுவித்த புத்தசயித்தியத்தைக் கண்டு வழிபட வந்தேன்; வந்தவிடத்து இங்குள்ள முனிவர்கள் காவிரிப்பூம் பட்டினம் கடல் கோட்படும் என்று அருளினர்; அதனால் யான் இங்கே தங்கினேன்; இனி, அறவணவடிகள் நினக்கு அறங்கூறற் கேற்றவிடம் ச்சிமாநகரென் றெண்ணி அங்கே மாதவியும் சுதமதியும் உடன்வரச் சென்றுள்ளார். மேலும் அக் கச்சிமாநகரும் வறுமையால் வருந்துகிறது; உயிர்கள் பல உணவின்றி இறக்கின்றன; அங்கே நீ சென்று அவற்றைப் பாதுகாப்பது பேரறம்'' என்று இசைத்தான். அதுகேட்ட மணிமேகலையும் வஞ்சிநகரின் மேற்றிசையில் விண் படர்ந்து, வடகிழக்காகக் கச்சிமாநகரடைந்து, அது வறங்கூர்தலால் பொலிவிழந்திருப்பது கண்டு மனமிரங்கினாள். பின்னர், அந்நகர் நடுவே- இளங்கிள்ளியென்பான் அனைத்திருந்த புத்தசயித்தியத்தை வணங்கி, அதற்குத் தென்மேற்கிலிருந்த பொழிலொன்றை யடைந்தாள். அவள் வரவறிந்த கஞ்சகன்சென்று கச்சிவேந்தற் கறிவிப்ப; அவன் தன் அரசி யற்சுற்றம் உடன்வர வந்து மணிமேகலையின் அறச் செயலைப் பாராட்டி வரவேற்று, தனக்குத் தெய்வமொன்று தோன்றி மணிமேகலையைப் பற்றிக் கூறியதைத் தெரிவித்து, அது தன்னை மணிபல்லவத் துள்ளது போலக் கோமுகிப்பொய்கையும் பொழிலும் பிறவும் சமைக்குமாறு பணித்ததையும், அவ்வாறே தான் செய்தமையும் தெரிவித்து, அவ்விடத்தையும் அவட்குக் காண்பித்தான். மணிமேகலையும் அதனைக் கண்டு வழிபட்டுக் "காணார் கேளார் கால்முட மானார், பேணா மாக்கள் பேசார் பிணித்தோர், படிவ நோன்பியர் பசிநோ யுற்றோர்" முதலிய பலரையும் வருவித்துத் தன் அமுதசுரபியால் இனிய அமுதுண்பித்தாள். அக்காலை அறவணடிகளும் மாதவியும் சுதமதியும் மணிமேகலையது அறச்சாலை யடைந்தனர். அவரைக் கண்டதும் மணிமேகலை அவர்க்குரிய வழிபாடியற்றி, அறுசுவை நால்வகை உணவு தந்து மகிழ்வித்துத் தன் ஆண்வேடத்தை மாற்றிக்கொண்டாள்.