பக்கம் எண் :

பக்கம் எண் :448

Manimegalai-Book Content
28. கச்சிமாநகர் புக்க காதை
 
இதன்கண் வஞ்சிநகரின் சிறப்பு 3-68 அடிகளிலும், மணிமேகலை மாசாத்துவானைக் கண்டதும் அவன் கூறியதும் 69-162 அடிகளிலும், அவள் கச்சிமாநகரடைந்து வேந்தனையும் அவன் சமைத்திருந்த கோமுகிப் பொய்கையையும் பொழிலையும் கண்டது 163-216 அடிகளிலும், அங்கே மணிமேகலை அறச்சாலை யமைத்து உயிர்களை உண்பித்த திறம் 217-234 அடிகளிலும், பின்பு மணிமேகலை அறவணன் முதலியோரை யடைந்தது 235-243 அடிகளிலும், அவள் ஆணுரு நீங்கிப் பெண்ணுருக் கொண்டது 244-245 அடிகளிலும் கூறப்படுகின்றன.]





5





10





15





20





25
ஆங்குத் தாயரோ டறவணர்த் தேர்ந்து
வாங்குவிற் றானை வானவன் வஞ்சியின்
வேற்று மன்னரு முழிஞைவெம் படையும்
போற்புறஞ் சுற்றிய புறக்குடி கடந்து
சுருங்கைத் தூம்பின் மனைவளர் தோகையர்

கருங்குழல் கழீ இய கலவை நீரும்
எந்திர வாவிய லிளைஞரு மகளிரும்
தந்தமி லாடிய சாந்துகழி நீரும்
புவிகா வலன்றன் புண்ணிய நன்னாட்
சிவிறியுங் கொம்புஞ் சிதறுவிரை நீரும்

மேலை மாதவர் பாதம் விளக்கும்
சீல வுபாசகர் செங்கைநறு நீரும்
அறஞ்செய் மாக்க ளகின்முதல் புகைத்து
நிறைந்த பந்தற் றசும்புவார் நீரும்
உறுப்புமுர ணுறாமற் கந்தவுத் தியினால்

செறித்தவரைப் போர்தஞ் செழுமனை நீரும்
என்றிந் நீரே யெங்கும் பாய்தலின்
கன்றிய கராமு மிடங்கரு மீன்களும்
ஒன்றிய புலவொழி யுடம்புன வாகித்
தாமரை குவளை கழுநீ ராம்பல்

பூமிசைப் பரந்து பொறிவண் டார்ப்ப
இந்திர தனுவென விலங்கக ழுடுத்து
வந்தெறி பொறிகள் வகைமாண் புடைய
கடிமதி லோங்கிய விடைநிலை வரைப்பில்
பசுமிளை பரந்து பஃறொழி னிறைந்த

வெள்ளிக் குன்ற முள்கிழிந் தன்ன
நெடுநிலை தோறு நிலாச்சுதை மலரும்