பக்கம் எண் :

பக்கம் எண் :449

Manimegalai-Book Content
28. கச்சிமாநகர் புக்க காதை
 



30





35





40





45





50





55





60
கொடிநிலை வாயில் குறுகினள் புக்குக
கடைகாப் பமைந்த காவ லாளர்
மிடைகொண் டியங்கும் வியன்மலி மறுகும்

பன்மீன் விலைஞர் வெள்ளுப்புப் பகருநர்
கண்ணெடை யாட்டியர் காழியர் கூவியர்
மைந்நிண விலைஞர் பாசவர் வாசலர்
என்னுநர் மறுகு மிருங்கோ வேட்களும்
செம்பு செய்ஞ்ஞரும் கஞ்ச காரரும்

பைம்பொன் செய்ஞ்ஞரும் பொன்செய் கொல்லாரும்
மரங்கொ றச்சரும் மண்ணீட் டாளரும்
வரந்தர வெழுதிய வோவிய மாக்களும்
தோலின் றுன்னருந் துன்ன வினைஞரும்
மாலைக் காரருங் காலக் கணிதரும்

நலந்தரு பண்ணுந் திறனும் வாய்ப்ப
நிலங்கலங் கண்ட நிகழக் காட்டும்
பாண ரென்றிவர் பல்வகை மறுகும்
விலங்கரம பொரூஉம் வெள்வளை போழ்நரோடு
இலங்குமணி வினைஞ ரிரீஇய மறுகும்

வேத்தியல் பொதுவிய லென்றிவ் விரண்டின்
கூத்தியல் பறிந்த கூத்தியர் மறுகும
பால்வே றாக வெண்வகைப் பட்ட
கூலங் குவைஇய கூல மறுகும்
மாகதர் சூதர்வே தாளிகர் மறுகும்

போகம் புரக்கும் பொதுவர்பொலி மறுகும்
கண்ணுழை கல்லா நுண்ணூற் கைவினை
வண்ண வறுவையர் வளந்திகழ் மறுகும்
பொன்னுரை காண்போர் நன்மனை மறுகும்
பன்மணி பகர்வோர் மன்னிய மறுகும்

மறையோ ரருந்தொழில் குறையா மறுகும்
அரசியன் மறுகு மமைச்சியன் மறுகும்
எனைப்பெருக தொழில்செ யேனேர் மறுகும்
மன்றமும் பொதியிலுஞ் சந்தியுஞ் சதுக்கமும்
புதுக்கோள் யானையும் பொற்றார்ப் புரவியும்

கதிக்குற வடிப்போர் கவின்பெறு வீதியும்