சேணோங் கருவி தாழ்ந்தசெய் குன்றமும
வேணவா மிகுக்கும் விரைமரக் காவும்
விண்ணவர் தங்கள் விசும்பிட மறந்து
நண்ணுதற் கொத்த நன்னீ ரிடங்களும்
சாலையுங் கூடமுந் தமனியப் பொதியிலும்
கோலங் குயின்ற கொள்கை யிடங்களும்
கண்டுமகிழ் வுற்றுக் கொண்ட வேடமோடு
அந்தர சாரிக ளமர்ந்தினி துறையும்
இந்திர விகார மெனவெழில் பெற்று