பக்கம் எண் :

பக்கம் எண் :451

Manimegalai-Book Content
28. கச்சிமாநகர் புக்க காதை





100





105





110





115





120





125

அன்புகொ ளறத்திற் கருகனே னாதலின
மனைத்திற வாழ்க்கையை மாயமென் றுணர்ந்து
தினைத்தனை யாயினுஞ் செல்வமும் யாக்கையும்
நிலையா வென்றே நிலைபெற வுணர்ந்தே
மலையா வறத்தின் மாதவம் புரிந்தேன்

புரிந்த யானிப் பூங்கொடிப் பெயர்ப்படூஉம்
திருந்திய நன்னகர்ச் சேர்ந்தது கேளாய்
குடக்கோச் சேரலன் குட்டுவர் பெருந்தகை
விடர்ச்சிலை பொறித்த வேந்தன் முன்னாள்
துப்படு செவ்வாய்த் துடியிடை யாரொடும்

இப்பொழில் புகுந்தாங் கிருந்த வெல்லையுள்
இலங்கா தீவத்துச் சமனொளி யென்னும்
சிலம்பினை யெய்தி வரங்கொண்டு மீளும்
தரும சாரணர் தங்கிய குணத்தோர்
கருமுகிற் படலத்துக் ககனத் தியங்குவோர

அரைசற் கேது வவ்வழி நிகழ்தலின்
புரையோர் தாமுமிப் பூம்பொழி லிழிந்து
கற்றலத் திருந்துழிக் காவலன் விரும்பி
முற்றவ முடைமையின் முனிகளை யேத்திப
பங்கயச் சேவடி விளக்கிப் பான்மையின்

அங்கவர்க் கறுசுவை நால்கை யமிழ்தம்
பாத்திரத் தளித்துப் பலபல சிறப்பொடு
வேத்தவை யாரொடு மேத்தின னிறைஞ்சலில்
பிறப்பிற் றுன்பமும் பிறவா வின்பமும்
அறத்தகை முதல்வ னருளிய வாய்மை

இன்ப வாரமு திறைவன் செவிமுதல்
துன்ப நீங்கச் சொரியு மந்நாள
நின்பெருந் தாதைக் கொன்பது வழிமுறை
முன்னோன் கோவலன் மன்னவன் றனக்கு
நீங்காக் காதற் பாங்க னாதலின

தாங்கா நல்லறந் தானுங் கேட்டு
முன்னோர் முறைமையிற் படைத்ததை யன்றித
தன்னா னியன்ற தனம்பல கோடி
எழுநா ளெல்லையு னிரவலர்க் கீத்துத