பக்கம் எண் :

பக்கம் எண் :453

Manimegalai-Book Content
28. கச்சிமாநகர் பக்க காதை


165





170





175





180





185





190





195

கொடிமதின் மூதூர்க் குடக்கணின் றோங்கி
வடதிசை மருங்கின் வானத் தியங்கித்

தேவர் கோமான் காவன் மாநகர்
மண்மிசைக் கிடந்தென வளந்தலை மயங்கிய
பொன்னகர் வறிதாப் புல்லென் றாயது
கண்டுளங் கசிந்த வொண்டொடி நங்கை
பொற்கொடி மூதூர்ப் புரிசை வலங்கொண்டு

நடுநக ரெல்லை நண்ணின ளிழிந்து
தொடுகழற் கிள்ளி துணையிளங் கிள்ளி
செம்பொன் மாச்சினைத் திருமணிப் பாசடைப்
பைம்பூம் போதிப் பகவற் கியற்றிய
சேதியந் தொழுது தென்மேற் காகத்

தாதணி பூம்பொழி றான்சென் றெய்தலும்
வையங் காவலன் றன்பாற் சென்று
கைதொழு திறைஞ்சிக் கஞ்சுக னுரைப்போன்
கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள்
நாவலந் தீவற் றானனி மிக்கோள்

அங்கையி னேந்திய வமுத சுரபியொடு
தங்கா திப்பதித் தருமத வனத்தே
வந்து தோன்றினள் மாமழை போலென
மந்திரச் சுற்றமொடு மன்னனும் விரும்பிக்
கந்திற் பாவை கட்டுரை யெல்லாம்

வாயா கின்றன வந்தித் தேத்தி
ஆய்வளை நல்லா டன்னுழைச் சென்று
செங்கோல் கோடியோ செய்தவம் பிழைத்தோ
கொங்கவிழ் குழலார் கற்புக் குறைபட்டோ
நலத்தகை நல்லாய் நன்னா டெல்லாம்

அலத்தற் காலை யாகிய தறியேன்
மயங்குவேன் முன்னரோர் மாதெய்வந் தோன்றி
உயங்கா தொழிநின் னுயர்தவத் தாலோர்
காரிகை தோன்று மவள்பெருங் கடிஞையின்
ஆருயிர் மருந்தா லகனில முய்யும்

ஆங்கவ னருளா லமரர்கோ னேவலின்
தாங்கா மாரியுந் தானனி பொழியும்