பக்கம் எண் :

பக்கம் எண் :454

Manimegalai-Book Content
28. கச்சிமாநகர் பக்க காதை



200





205





210





215





220





225





230
அன்னா ளிந்த வகநகர் புகுந்த
பின்னா ணிகழும் பேரறம் பலவால்
கார்வறங் கூரினும் நீர்வறங் கூராது

பாரக விதியிற் பண்டையோ ரிழைத்த
கோமுகி யென்னுங் கொழுநீ ரிலஞ்சியொடு
மாமணி பல்லவம் வந்த தீங்கெனப்
பொய்கையும் பொழிலும் புனைமினென் றறைந்தத்
தெய்வதம் போயபிற் செய்தியா மமைத்தது

இவ்விட மென்றே யவ்விடங் காட்டவத்
தீவகம் போன்ற காவகம் பொருந்திக்
கண்டுளஞ் சிறந்த காரிகை நல்லாள்
பண்டையெம் பிறப்பினைப் பான்மையிற் காட்டிய
அங்கப் பீடிகை யிதுவென வறவோன்

பங்கயப் பீடிகை பான்மையின் வகுத்துத்
தீவ திலகையுந் திருமணி மேகலா
மாபெருந் தெய்வமும் வந்தித் தேத்துதற்கு
ஒத்த கோயி லுளத்தகப் புனைந்து
விழவுஞ் சிறப்பும் வேந்த னியற்றத்

தொழுதகை மாதர் தொழுதன ளேத்திப்
பங்கயப் பீடிகைப் பசிப்பிணி மருந்தெனும்
அங்கையி னேந்திய வமுத சுரபியை
வைத்துநின் றெல்லா வுயிரும் வருகெனப்
பைத்தர வல்குற் பாவைதன் கிளவியின்

மொய்த்த மூவறு பாடை மாக்களில்
காணார் கேளார் கான்முட மானோர்
பேணா மாக்கள் பேசார் பிணித்தோர்
படிவ நோன்பியர் பசிநோ யுற்றோர்
மடிநல் கூர்ந்த மாக்கள் யாவரும்

பன்னூ ராயிரம் விலங்கின் றொகுதியும்
மன்னுயி ரடங்கலும் வந்தொருங் கீண்டி
அருந்தியோர்க் கெல்லா மாருயிர் மருந்தாய்ப்
பெருந்தவர் கைபெய் பிச்சையின் பயனும்
நீரு நிலமுங் காலமுங் கருவியும்

சீர்பெற வித்திய வித்தின் விளைவும்