28.
கச்சிமாநகர் பக்க காதை
|
235
240
245 |
பெருகிய தென்னப் பெருவளஞ் சுரப்ப
வசித்தொழி லுதவி வளந்தந் ததுவெனப்
பசிப்பிணி தீர்த்த பாவையை யேத்திச்
செல்லுங் காலைத் தாயர் தம்முடன்
அல்லவை கடிந்த வறவண வடிகளும்
மல்லன் மூதூர் மன்னுயிர் முதல்வி
நல்லறச் சாலை நண்ணினர் சேறலும்
சென்றவர் தம்மைத் திருவடி வணங்கி
நன்றென விரும்பி நல்லடி கழுவி
ஆசனத் தேற்றி யறுசுவை நால்வகைப்
போனக மேந்திப் பொழுதினிற் கொண்டபின
பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து
வாய்வ தாகவென் மனப்பாட் டறமென
மாயைவிட் டிறைஞ்சினள் மணிமே கலையென்.
|
1--4.
|
உரை
ஆங்குத் தாயரொடு அறவணர்த் தேர்ந்து - வஞ்சி நகரத்தின் கண் மாதவி சுதமதியுடன்
அறவணவடிகளையும் காண நினைந்து, வாங்கு வில்தானை வானவன் வஞ்சியின் - வளைந்த
வில்லேந்திய படையினையுடைய சேரனது வஞ்சி நகரத்தில், வேற்று மன்னரும் உழிஞை
வெம்படையும் போற் புறஞ் சுற்றிய புறக்குடி கடந்து - பகை மன்னரும் புறமதிலைக்
காக்கும் கொடிய படையினரும் போல அரணைச் சுற்றிலுமுள்ள புற நகரத்தைக் கடந்து
;
|
வஞ்சி
நகர்ப்புறத்தே பல்வகைச் சமயவாதிகளைக் கண்டு அவர் திறம் கேட்டுப் போந்த
மணிமேகலை தன் தாயரையும் அறவணனையும் நினைந்து புறஞ்சேரி கடந்து, அந்நகர்க்குட்
செல்கின்றாளாதலின், "வஞ்சியின் புறக்குடி கடந்து" என்றார். மாதவியோடு சுதமதியையும் உளப்படுத்தி யுரைத்தலின், "தாயர்" என்றார். புறக்குடி, புறநகர்.
மன்னவ குமரரிருக்கையும் தானைவீரர் இருக்கையும் அரணைச் சூழ்ந்திருத்தலின்,
"வேற்று மன்னரும் உழிஞை வெம்படையும் போல" என்றார்.
|
5--22. |
சுருங்கைத் தூம்பின் மனைவளர் தோகையர் கருங்குழல் கழீஇய கலவை நீரும்-இல்லங்களிற்
சிந்துகின்ற நீரானது செல்லுமாறு கற்களான் மறைத்தமைக்கப்பட்ட சாக்கடைகளின்
வழியாக மாடங்களிலுள்ள மகளிர் கரிய கூந்தலை யாட்டிய நறுமணக் கலவையினையுடைய
நீரும், எந்திர வாவியில் இளைஞரும் மகளிரும் தந்தமில் ஆடிய சாந்து கழி நீரும்
- வேண்டுங்காற் பெருக்கியும்
|
|