மயங்குவேன் முன்னர்த் தெய்வம்
தோன்றி, தோன்றும், நிலம் உய்யும், மாரி பொழியும், அறம் பலவால், வறங்கூராது,
புனைமின் என அறைந்து போயபின், அமைத்தது இவ்விடம் என்று காட்ட என, இயையும்.
மணிமேகலை போதருதற்குக் காரணம் வேந்தனது தவம் என்றற்கு ''''நின்னுயர் தவத்தால்''''
என்றார். ஆருயிர் என்புழி, ஆர்தல்- நிறைதல். மிக்க மழை யென்றற்குத்
''''தாங்கா மாரி'''' என்றார். கோமுகிப் பொய்கையை மணிபல்லவத்தின்கண்
பண்டையோர் இழைத்தன ராதலின், கடனடுவணுள்ள தீவின்கண்ணுள்ளது போல நிலத்திடத்தும்
முறைப்படி செய்தமைத்தலின், ''''பாரக விதியின்'''' என்றார். பாரக விதியிற்
புனைமின் என இயைக்க. செய்தி - செயற்கை ; எனவே மணிபல்லவம் இயற்கையா
யமைந்த தென்றும், கோமுகி மட்டில் பண்டையோரிழைத்த தென்றும் கொள்க.
பாரக வீதியின் என்றும் பாடம்.
206-19. அத்தீவகம் போன்ற காவகம் பொருந்தி கண்டு உளஞ்சிறந்த காரிகை நல்லாள்
- மணிபல்லவத்தை ஒத்த அச்சோலையிற் சென்று அதன் சிறப்பினைக் கண்டு மன
மகிழ்ந்த மணிமேகலை பண்டை யெம்பிறப்பினைப் பான்மையிற் காட்டிய அங்கப்பீடிகை
இதுவென - எம்முடைய பண்டைப் பிறப்பை அறிவுறுத்திய அத் தீவின்கணுள்ள புத்த
பீடிகை இதுவாகும் என்று, அறவோன் பங்கயப் பீடிகை பான்மையின் வகுத்து - புத்தன்
திருவடித் தாமரை பொருந்திய பீடிகை முறைப்படி யமைத்து ; வந்தித்து ஏத்துதற்கு
தீவதிலகையும் திரு மணிமேகலா மாபெருந் தெய்வமும்-தான் வணங்கி வழிபடும் பொருட்டுத்
தீவதிலகையையும் மணிமேகலா தெய்வத்தையும், ஒத்த கோயிலுள் அத்தகப் புனைந்து
- பீடிகைக் கேற்பவமைந்த கோயிற்குள் ஆண்டைய தகுதியெல்லாமமையச் செய்தமைத்து,
விழவுஞ் சிறப்பும் வேந்தன் இயற்ற - அவற்றிற்கு விழாக்களும் வேறு சிறப்புக்களும்
அரசனைக்கொண்டு இயற்றுவித்து, தொழுதகை மாதர் தொழுதனள் ஏத்தி - வணங்கப்படுந்
தகுதியினையுடைய மணிமேகலை பணிந்து துதித்து, அங்கையின் ஏந்திய பசிப்பிணி
மருந்து எனும் அமுத சுரபியை - கையில் ஏந்தியுள்ள பசியாகிய நோய்க்கு மருந்து
என்னும் அமுதசுரபியை, பங்கயப் பீடிகை வைத்து நின்று எல்லா வுயிரும் வருக என
- புத்த பீடிகைக்கண்ணே வைத்து நின்று அனைத்துயிரும் உணவுண்ண வருக என அழைக்க;
தன்
பிறப்பும் மாதவி சுதமதி முதலாயினார் பிறப்பும் அறிந்து கொண்டமையின், ''''எம்பிறப்பினை''''
யென்றாள். அங்கு அப்பீடிகை - அம் மணிபல்லவத்தே யிருந்த தன் பழம் பிறப்பறிதற்
கேதுவாகிய புத்த பீடிகை. பங்கயப் பீடிகை - தாமரைப்பூப்போ லமைக்கப்பட்ட
பீடிகை; ஈண்டு அது புத்தனுடைய தாமரைபோலும் திருவடி பொருந்துதற்
|