கமைந்த பீடிகை யென்னுமாறு
நின்றது. தீவதிலகை, பீடிகை காக்கும் தெய்வதம். மணிமேகலைக்குப் பெருநலஞ்
செய்த தெய்வ மாகலின், ''''திரு மணி மேகலா மாபெருந் தெய்வம்'''' என்று சிறப்பித்தார்.
பீடிகை யமைந்த பெருங்கோயில், தீவதிலகை மணிமேகலா தெய்வம் என்ற இரண்டும்
ஒருங்கு நிறுவுதற்கமையுமாறு செய்யப்பட்டது பற்றி, ''''ஒத்த கோயி'''' லென்றார்.
உளத்தக என்று கொண்டு, நினைத்தற்குத்தக என்று உரை கூறுவாருமுளர். பசிப்பிணி
மருந்து நல்கும் சுரபியை ''''மருந்தெனும் சுரபி'''' யென்றும், இதுகாறும் அங்கையி
னேந்தி நின்ற சுரபியை, பீடிகையில் வைத்து வழிபட்டு எடுத்தலின், ''''அங்கையி னேந்திய அமுத சுரபி'''' என்றும் கூறினார்.
220-7. பைத்தர
வல்குல் பாவை தன் கிளவியின்-படத்தையுடைய பாம்புபோலும் அல்குலையுடைய பாவையைப்போன்ற
மணிமேகலை தன் இனிய மொழிகளால் மொய்த்த மூவறுபாடை மாக்களில் - நெருங்கிய
பதினெண்வகை மொழியினையுடைய மாக்களில், காணார் கேளார் கான்முடமானோர்
- குருடரும் செவிடரும் முடவரும் பேணாமாக்கள் பேசார் பிணித்தோர் - பாதுகாப்போரற்ற
அகதிகளும் மூங்கையரும் நோயுற்றவரும், படிவநோன்பியர் பசிநோயுற்றோர் - தவவேடத்தையும்
விரதங்களையு முடையோரும் பசியாகிய பிணியடைந்தோரும், மடிநல்கூர்ந்த மக்கள்
யாவரும் - உடையின்றித் துன்பமெய்திய மக்கள் அனைவரும், பன்னூறாயிரம் விலங்கின்
தொகுதயும் - பலகோடி விலங்குகளின் கூட்டமும், மன்னுயிர் அடங்கலும் வந்து ஒருங்கு
ஈண்டி - நிலைபெற்ற உயிர்கள் யாவும் ஒருங்கே வந்து சேரவும்;
பைத்தரவல்குலென்றது,
பாவைக்கு அடை. பாவை போல்வாளைப் பாவையென்றது ஆகுபெயர். கால் முடமானோர்-காலால்
முடமானவர்; பிணித்தோர்-நோயுற்றவர்: இது துச்சாரியைபெற்று முடிந்தது; பிணிக்
கப்பட்டோ ரென்றுமாம். மடி - உடை; மடிமையால் வறுமையுறு வோரை யருளுவது அம் மடிமையாகிய
தீவினையை வளர்க்குஞ் செய்கையால் அறமாகாதொழிதலின், ''''சோம்புதலால் வறுமையுற்ற
மாக்கள்'''' என்றல் பொருந்தாமையறிக. ஈண்டவெனத் திரிக்க; ஈண்டியென்றே கொண்டு,
செல்லும் என்பதனோ டியைத்தலுமொன்று.
228-35, அருந்தியோர்க்கு
எல்லாம் ஆருயிர் மருந்தாய்-உண்போ ரனைவருக்கும் அரிய உயிரை வளர்க்கும் மருந்தாய்,
பெருந்தவர் கைபெய் பிச்சையின் பயனும்-பெரியோர் கையிலிட்ட அறத்தின் பயனும்,
நீரு நிலமும் காலமும் கருவியும் சீர்பெற வித்திய வித்தின் விளையும் - நீர்
நிலம் பொழுது கருவி ஆகிய யாவும் செவ்வே அமைந்த விடத்து விதைக்கப்பட்ட விதையாலுண்டாகிய
விளைபயனும், பெருகிய தென்ன - பெருகியவாறு போல ; பெருவளம் சுரப்ப - மிக்க
வளத்தினை அப் பாத்திரம் சுரந்து கொடுக்க; வசித்
|