முதல்வி'''' யென்றும் சிறப்பித்தார். அறவணன் வரவு தன்னை நோக்கி அறமே வருவதாகக்
கருதுகின்றாளாதலின், ''''நன்றென விரும்பி'''' எதிர்கொண்டாளெனவறிக. பின்னரும்,
''''வாயவதாக என் மனப்பாட்டறம்'''' என்பது காண்க. மாதவனுருவம் மாயமெனப்பட்டது,
மணிமேகலையின் உண்மை வடிவமன்மையின்.
மணிமேகலை, தாயரோடு அறவணர்த்தேர்ந்து,
வஞ்சியின் புறக்குடி கடந்து, மறுகும் மன்றமுதலியனவும், விரைமரைக்காவும், இடங்களும்
கண்டு மகிழ்வுற்று, கொண்ட வேடமொடு, பள்ளிபுக்கு, மாதவம் புரிந் தோன் பாதம்
பணிந்து, சொல்லின ளாதலின், அவட்கு அருந்தவன் நின்கடன் என அருள, ஆயிழை,
பாத்திரம் செங்கையினேந்தி, மூதூர்க் கணின்றோங்கி, வடதிசை மருங்கின் வானத்தியங்கி,
நகர் புல்லென்றாயது கண்டு உளம் கசிந்த ஒண்டொடி, வலங்கொண்டு, இழிந்து நண்ணி''
சேதியந் தொழுது, பொழில் சென்றெய்தலும், கஞ்சுகன் வேந்தற் குரைப்போன்
வந்து தோன்றினள் என, மன்னனும் விரும்பிச் சென்று, அவ்விடம் காட்ட, காவகம்
பொருந்தி, வருத்து, புனைந்து, இயற்ற, எத்தி, சரபியை வைத்து நின்று, வருகென,
கிளவியின், காணார் முதலாகிய மாக்களும் விலங்கின் தொகுதியும், சுரப்பவுண்டு,
எத்திச் செல்லுங்காலை, தாயரும் அடிகளும் நண்ணினர் சேறலும், விரும்பிச் சென்று,
வணங்கி, கழுவி, ஏந்தி, கொண்டபின், படைத்து, வாய்வதாக என மாயை விட்டு
இறைஞ்சினள் என, வினை முடிபுகொள்க.
கச்சிமாநகர்
புக்க காதை முற்றிற்று.
|