|
கண்டு நிற்போரும் ஆகிய பல குழுவினரும் முன்பு விராடன் பேரூரில் பேடியுருக்கொண்டு
சென்ற அருச்சுனனைச் சூழ்ந்த கம்பலை மாக்கள் போல் மணிமேகலையைச் சூழ்ந்துகொண்டு,
''இத்துணைப் பேரழகுடைய இவளைத் தவநெறிப்படுத்திய தாய் கொடியளாவள்; இவள்
வனத்திற் செல்லின் ஆங்குள்ள அன்னப்பறவை முதலியன இவள் நடை முதலியவற்றைக்
கண்டு என்ன துன்பமுறா'' என்று இவை போல்வன கூறி, அவளழகைப் பாராட்டி வருந்தி
நின்றனர்; மணிமேகலை சுதமதியுடன் பலவகை மலர்களாலும் வித்தரியற்றிய சித்திரப்படாம்
போர்த்தது போல் விளங்கிய உவவனத்தின்கண் மலர் கொய்யப் புகுந்தனள். (இதிற்
கூறப்பட்டுள்ள களிமகன், பித்தன் என்போருடைய இயல்புகள் படித்து இன்புறற்பாலன.
ஒரு நகர வீதியில் இயல்பாக நிகழும் நிகழ்ச்சிகளை இடனறிந்து ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ள
திறம் பாராட்டற்குரியது.)]
|