பக்கம் எண் :

பக்கம் எண் :22

Manimegalai-Book Content
3. மலர்வனம் புக்க காதை


25





30





35





40





45





50





55
ஆடவர் கண்டால் அகறலு முண்டோ
பேடிய ரன்றொ பெற்றியின் நின்றிடின்

ஆங்ஙன மன்றியும் அணியிழை கேளாய்
ஈங்கிந் நகரத் தியான்வருங் காரணம்
பாரா வாரம் பல்வளம் பழுநிய
காராளர் சண்பையிற் கௌசிக னென்போன்
இருபிறப் பாளன் ஒருமக ளுள்ளேன்

ஒருதனி யஞ்சேன் ஓரா நெஞ்மோடு
ஆரா மத்திடை அலர்கொய் வேன்றனை
மாருத வேகனென் பானோர் விஞ்சையன்
திருவிழை மூதூர் தேவர்கோற் கெடுத்த
பெருவிழாக் காணும் பெற்றியின் வருவோன்

தாரன் மாலையன் றமனியப் பூணினன்
பாரோர் காணாப் பலர்தொழு படிமையன்
எடுத்தனன் எற்கொண் டெழுந்தனன் விசும்பிற்
படுத்தன னாங்கவன் பான்மையே னாயினேன்
ஆங்கவன் ஈங்கெனை அகன்றுகண் மாறி

நீங்கினன் றன்பதி நெட்டிடை யாயினும்
மணிப்பூங் கொம்பர் மணிமே கலைதான்
தனித்தலர் கொய்யுந் தகைமைய ளல்லள்
பன்மல ரடுக்கிய நன்மரப் பந்தர்
இலவந் திகையின் எயிற்புறம் போகின்

உலக மன்னவன் உழையோர் ஆங்குளர்
விண்ணவர் கோமான் விழாக்கொள் நன்னாள்
மண்ணவர் விழையார் வானவ ரல்லது
பாடுவண் டிமிரா பன்மரம் யாவையும்
வாடா மாமலர் மாலைகள் தூக்கலின்

கைபெய் பாசத்துப் பூதங் காக்குமென்று
உய்யா னத்திடை உணர்ந்தோர் செல்லார்
வெங்கதிர் வெம்மையின் விரிசிறை யிழந்த
சம்பாதி யிருந்த சம்பாதி வனமும்
தவாநீர்க் காவிரிப் பாவைதன் தாதை

கவேரனாங் கிருந்த கவோ வனமும்
மூப்புடை முதுமைய தாககணங் குடைய