பக்கம் எண் :

பக்கம் எண் :23

Manimegalai-Book Content
3. மலர்வனம் புக்க காதை



60





65





70





75





80





85





90

யாப்புடைத் தாக அறிந்தோ ரெய்தார்
அருளும் அன்பும் ஆருயி ரோம்பும்
ஒருபெரும் பூட்கையும் ஒழியா நோன்பிற்

பகவன தாணையிற் பன்மரம் பூக்கும்
உவவன மென்பதொன் றுண்டத னுள்ளது
விளிப்பறை போகாது மெய்புறத் திடூஉம்
பளிக்கறை மண்டப முண்டத னுள்ளது
தூநிற மாமணிச் சுடரொளி விரிந்த

தாமரைப் பீடிகை தானுண் டாங்கிடின்
அரும்பவிழ் செய்யும் அலர்ந்தன வாடா
சுரும்பின மூசா தொல்யாண்டு கழியினும்
மறந்தேன் அதன்திறம் மாதவி கேளாய்
கடம்பூண் டோர்தெய்வங் கருத்திடை வைத்தோர்

ஆங்கவ ரடிக்கிடின் அவரடி தானுறும்
நீங்கா தியாங்கணும் நினைப்பில ராயிடின்
ஈங்கிதன் காரணம் என்னை யென்றியேல்
சிந்தை யின்றியுஞ் செய்வினை யுறுமெனும்
வெந்திறல் நோன்பிகள் விழுமங் கொள்ளவும்

செய்வினை சிந்தை யின்றெனின் யாவதும்
எய்தா தென்போர்க் கேது வாகவும்
பயங்கெழு மாமல ரிட்டுக் காட்ட
மயன்பண் டிழைத்த மரபின ததுதான்
அவ்வன மல்ல தணியிழை நின்மகள்

செவ்வனஞ் செல்லுஞ் செம்மை தானிலள்
மணிமே கலையொடு மாமலர் கொய்ய
அணியிழை நல்லாய் யானும் போவலென்
றணிப்பூங் கொம்பர் அவளொடுங் கூடி
மணித்தேர் வீதியிற் சுதமதி செல்வுழீ இச்

சிமிலிக் கரண்டையன் நுழைகோற் பிரம்பினன்
தவலருஞ் சிறப்பின் அராந்தா ணத்துளோன்
நாணமும் உடையும் நன்கனம் நீத்துக்
காணா உயிர்க்குங் கையற் றேங்கி
உண்ணா நோன்போ டுயவ வியானையின்

மண்ணா மேனியன் வருவோன் றன்னை