95  
  
  
  
  
  
 100 
  
  
  
  
  
 105  
  
  
  
  
  
 110  
  
  
  
  
  
 115  
  
  
  
  
  
 120  
  
  
  
  
  
 125  
 
 | 
  
 வந்தீ ரடிகணும் மலரடி தொழுதேன் 
 எந்தம் அடிகள் எம்முரை கேண்மோ 
 அழுக்குடை யாக்கையிற் புகுந்த நும்முயிர் 
 புழுக்கறைப் பட்டோர் போன்றுளம் வருந்தா 
  
 திம்மையும் மறுமையும் இறுதியி லின்பமும் 
 தன்வயிற் றரூஉமென் தலைமக னுரைத்தது 
 கொலையு முண்டோ கொழுமடற் றெங்கின் 
 விளைபூந் தேறலின் மெய்த்தவத் தீரே 
 உண்டு தெளிந்திவ் யோகத் துறுபயன் 
  
 கண்டா லெம்மையுங் கையுதிர்க் கொண்மென 
 உண்ணா நோன்பி தன்னொடுஞ் சூளுற் 
 றுண்மென இரக்குமோர் களிமகன் பின்னரும் 
 கணவிரி மாலை கட்டிய திரணையன் 
 குவிமுகி ழெருக்கிற் கோத்த மாலையன் 
  
 சிதவற் றுணியொடு சேணோங்கு நெடுஞ்சினைத் 
 ததர்வீழ் பொடித்துக் கட்டிய உடையினன் 
 வெண்பலி சாந்த பெய்ம்முழு துறீ இப் 
 பண்பில் கிளவி பலரொடும் உரைத்தாங்கு 
 அழூஉம் விழூஉம் அரற்றுங் கூஉம் 
  
 தொழூஉம் எழூஉஞ் சுழலலுஞ் சுழலும் 
 ஓடலு மோடும் ஒருசிறை யொதுங்கி 
 நீடலும் நீடும் நிழலொடு மறலும் 
 மைய லுற்ற மகன்பின் வருந்திக் 
 கையறு துன்பங் கண்டுநிற் குநரும் 
  
 சுரியற் றாடி மருள்படு பூங்குழல் 
 பவளச் செவ்வாய்த் தவள வாள்நகை 
 ஒள்ளரி நெடுங்கண் வெள்ளிவெண் தோட்டுக் 
 கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறைநுதல் 
 காந்தளஞ் செங்கை ஏந்திள வனமுலை 
  
 அகன்ற அல்குல் அந்நுண் மருங்குல் 
 இகந்த வட்டுடை எழுதுவரிக் கோலத்து 
 வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி 
 நீணில மளந்தோன் மகன்முன் னாடிய 
 பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும் 
  
 
 |