| பக்கம் எண் :25 |
|
Manimegalai-Book Content
|
3.
மலர்வனம் புக்க காதை
|
130
135
140
145
150
155
|
வம்ப மாக்கள் கம்பலை மூதூர்ச்
சுடும ணோங்கிய நெடுநிலை மனைதொறும்
மையறு படிவத்து வானவர் முதலா
எவ்வகை உயிர்களும் உவமங் காட்டி
வெண்சுதை விளக்கத்து வித்தக ரியற்றிய
கண்கவர் ஓவியங் கண்டுநிற் குநரும்
விழவாற்றுப் படுத்த கழிபெரு வீதியிற்
பொன்னாண் கோத்த நன்மணிக் கோவை
ஐயவி யப்பிய நெய்யணி முச்சி
மயிர்ப்புறஞ் சுற்றிய கயிற்கடை முக்காழ்
பொலம்பிறைச் சென்னி நலம்பெறத் தாழச்
செவவாய்க் குதலை மெய்பெறா மழலை
சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப
அற்றங் காவாச் சுற்றுடைப் பூந்துகில்
தொடுத்தமணிக் கோவை உடுப்பொடு துயல்வரத்
தளர்நடை தாங்காக் கிளர்பூட் புதல்வரைப்
பொலந்தேர் மீமிசைப் புகர்முக வேழத்
திலங்குதொடி நல்லார் சிலர்நின் றேற்றி
ஆலமர் செல்வன் மகன்விழாக் கால்கோள்
காண்மி னோவெனக் கண்டுநிற் குநரும்
விராடன் பேரூர் விசயனாம் பேடியைக்
காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்
மணிமே கலைதனை வந்துபுறஞ் சுற்றி
அணியமை தோற்றத் தருந்தவப் படுத்திய
தாயோ கொடியள் தகவிலள் ஈங்கிவள்
மாமலர் கொய்ய மலர்வனந் தான்புகின்
நல்லிள வன்னம் நாணா தாங்குள
வல்லுந கொல்லோ மடந்தை தன்னடை
மாமயி லாங்குள வந்துமுன் நிற்பன
சாயல்கற் பனகொலோ தையல் தன்னுடன்
பைங்கிளி தாமுள பாவைதன கிளவிக்
கெஞ்சல கொல்லொ இசையுந வல்ல
என் றிவை சொல்லி யாவரும் இனைந்துகச்
செந்தளிர்சி சேவடி நிலம்வடு வுறாமல்
|
| |
|
|