பக்கம் எண் :

பக்கம் எண் :26

Manimegalai-Book Content
3. மலர்வனம் புக்க காதை

160





165





170





குரவமும் மரவமுங் குருந்துங் கொன்றையும்

திலகமும் வகுளமுங் செங்கால் வெட்சியும்
நரந்தமும் நாகமும் பரந்தலர் புன்னையும்
பிடவமுந் தளவமும் முடமுட் டாழையும்
குடசமும் வெதிரமுங் கொழுங்கா லசோகமும
செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும்

எரிமல ரிலவமும் விரிமலர் பரப்பி
வித்தக ரியற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரச் செய்கைப் படாம்போர்த் ததுவே
ஒப்பத் தோன்றிய உவவனந் தன்னைத்
தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு

மலர்கொய்யப் புகுந்தனள் மணிமே கலையென்.

உரை

1--4.

வயந்த மாலைக்கு மாதவி உரைத்த - வயந்த மாலையினிடம் மாதவி கூறிய, உயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றி - பிறரும் வருந்துதற்குக் காரணமாகிய மிக்க துன்பந்தரும் மொழி யினிடமாக உதித்து, மாமலர் நாற்றம்போல்-சிறந்த மலரிடத்து நாற்றம்போல், மணிமேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளது ஆதலின்-மணிமேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ப்பட்டதாதலால் ;

உரைத்த உரை யென்க. ஏது நிகழ்ச்சி-பயனுக்கு ஏதுவாகிய வினையின் நிகழ்ச்சி ; வினை பயன்கொடுத்தற்குத் தோன்றுவது என்ற படி ; 1 "ஏது நிகழ்ச்சி யீங்கின் றாதலின்" 2 "ஏது நிகழ்ச்சி யாவும் பலவுள" என இந்நூலுள்ளே பின்னரும் இப்பெயர் பயின்று வருகின்றது. மாமலர் நாற்றம்போல் என்ற உவமையால் நல்வினை பயனளித்தற் கெதிர்ந்துள தென்பது பெற்றாம். மலரின்கண் நாற்றம் அடங்கியிருந்து பின் வெளிப்படுதல் போல் கன்மமும் மறைந்திருந்து பயனளிக்குங் காலம் வந்துழி வெளிப்படு மென்க.

5--10. தந்தையும் தாயும் தாம் நனி உழந்த - தன் தந்தை தாயரான கோவலனும் கண்ணகியும் உற்று மிக வருந்திய, வெந்துயர் இடும்பை செவியகம் வெதுப்ப-கொடிய துயரினை விளைக்கும் துன்ப மொழிகள் காதினுள்ளே சுட, காதல் நெஞ்சம் கலங்கிக் காரிகை - மணிமேகலை அவர்பால் அன்பு மிக்க உள்ளங் கலக்க முற்று, மாதர் செங்கண் வரி வனப்பு அழித்து - அழகிய சிவந்த கண்களில் மை எழுதின அழகினைச் சிதைத்து, புலம்பு நீர் உருட்டி-வருத்தத்தா லுண்டாகிய கண்ணீரை உதிர்த்து, பொதி

1 மணி. 9 : 54.    2 மணி. 12 : 105 ; 21 : 160.