மாதவி மணிமேகலை முகம் நோக்கி-மாதவி
மணிமேகலையின் முகத்தினைப் பார்த்து, தாமரை தண்மதி சேர்ந்ததுபோலக் காமர்
செங்கையில் கண்ணீர் மாற்றி-செந்தாமரை மலர்
குளிர்ச்சி பொருந்திய முழுமதியைச் சேர்ந்ததுபோலத் தன் விருப்பம் பொருந்திய
சிவந்த கையினால் மணிமேகலையின் கண்ணினின் றொழுகும் நீரைத் துடைத்து, தூநீர்
மாலை தூத்தகை இழந்தது - தூய நீர்மையையுடைய நறுமலர் மாலை கண்ணீரால் நனைந்து
தூய தன்மையை இழந்தது ஆகலின், நிகர்மலர் நீயே கொணர்வாய் என்றலும்-வேறு
மாலை தொடுத்தற்கு ஒளி பொருந்திய மலர்களை நீயே சென்று கொண்டுவருக என உரைத்தலும்,
மதுமலர்க் குழலியொடு மாமலர் தொடுக்கும்-தேன்பொருந்திய மலர்களை யணிந்த
கூந்தலையுடைய மணிமேகலையுடன் மலர் தொடுத்துக் கொண்டிருக்கும், சுதமதி கேட்டுத்
துயரொடும் கூறும் - சுதமதி யென்பவள் அதனைக் கேட்டுத் துயருடன் கூறுகின்றாள்
;
மாதவி
நோக்கி, மாற்றி, கொணர்வாய் என்றலும், சுதமதி கேட்டுக் கூறுமென்க.
போல - போலும்படி, தாமரை
மலர் மாதவி கைக்கும், மதி மணிமேகலை முகத்திற்கும் உவமை. காமர் - விருப்பம்
; உடையாளது விருப்பம் கையின்மேல் ஏற்றப்பட்டது ; அழகுமாம். நிகர்-ஒளி ;
2"நீர்வார் நிகர்.
மலர்" 3“அரும்பவிழ்
முல்லை, நிகர் மலர்" என்பன காண்க. நீயே கொணர்வாய் என்றது கழுவாய் கூறுவது
போன்று அவளது துயரினை மாற்றுவதோ ருபாயங் கருதியாம்.