345
350
355
360
365
370
375
|
யாதொன் றியாதொன் றமூர்த்தமது நித்தம்
ஆதலாற் காண்புற்றது பரமாணு விலெனில்
திட்டாந் தப்பர மாணு
நித்தத் தோடு மூர்த்த மாதலாற்
சாத்திய தன்ம நித்தத்துவ நிரம்பிச்
சாதன தன்மவமூர்த் தத்துவங் குறையுஞ்
சாத்திய தன்ம விகல மாவது
காட்டப் பட்ட திட்டாந் தத்திற்
சாத்திய தன்மங் குறைவு படுதல்
சத்த நித்த மமூர்த்த மாதலால்
யாதொன் றியாதொன் றமூர்த்தமது நித்தம்
புத்தி போஒ லென்றால்
திட்டாந்த மாகக் காட்டப் பட்ட
புத்தி யமூர்த்த மாகி நின்றே
யநித்த மாதலாற் சாதன வமூர்த்தத்துவ
நிரம்பிச் சாத்திய நித்தத்துவங் குறையும்
உபய தன்ம விகல மாவது
காட்டப் பட்ட திட்டாந் தத்திலே
சாத்திய சாதன மிரண்டுங் குறைதல்
அன்றியு மதுதான் சன்னு மசன்னும்
என்றிரு வகையா மிவற்றுட்சன் னாவுள
உபய தன்ம விகல மாவது
உள்ள பொருட்கட் சாத்திய சாதனங்
கொள்ளு மிரண்டுங் குறையக் காட்டுதல்
சத்த நித்த மமூர்த்த மாதலான்
யாதொன்றி யாதொன் றமூர்த்தமது நித்தம்
கடம்போ லெனிற்றிட் டாந்த மாகக்
காட்டப் பட்டகடந் தானுண் டாகிச்
சாத்திய மாயுள நித்தத் துவமும்
சாதன மாயுள வமூர்த்தத்து வமுங்குறையும்
அசன்னா வுள்ள வுபயதன்ம விகலம்
இல்லாப் பொருட்கட் சாத்திய சாதனம்
என்னு மிரண்டுங் குறையக் காட்டுதல்
சத்த மநித்த மூர்த்த மாதலான்
|