380
385
390
395
400
405
410
|
யாதொன் றியாதொன்று மூர்த்தமத நித்தம்
ஆகாசம் போலெனுந் திட்டாந் தத்துச்
சாத்திய தன்மமா யுள்ள வநித்துமுஞ்
சாதன தன்மமா யுள்ள மூர்த்தமும்
இரண்டு மாகாச மசத்தென் பானுக்
கதன்க ணின்மை யானே குறையும்
உண்டென் பானுக் காகாச நித்தம்
அமூர்த்த மாதலர் லவனுக்குங் குறையும்
அநன்னுவய மாவது சாதன சாத்தியந்
தம்மிற் கூட்ட மாத்திரஞ்சொல் லாதே
இரண்ட னுடைய வுண்மையைக் காட்டுதல்
சத்த மநித்தங் கிருத்த மாதலின்
யாதொன்று யாதொன்று கிருத்தம தநித்தமெனும்
அன்னுவயஞ் சொல்லாது குடத்தின் கண்ணே
கிருத்த வநித்தங் காணப் பட்ட
என்றா லன்னுவயந் தெரியா தாகும்
விபரீ தான் னுவயம் வியாபகத் துடைய
அன்னுவயத் தாலே வியாப்பியம் விதித்தல்
சத்த மநித்தங் கிருத்தத் தாலெனின்
யாதொன்று யாதொன்று கிருத்த மநித்தமென
வியாப்பியத் தால்வியா பகத்தைக் கருதா
தியாதொன் றியாதொன் றநித்தமது கிருத்தமென
வியாபகத் தால்வியாப் பியத்தைக் கருதுதல்
அப்படிக் கருதின் வியாபகம் வியாப்பியத்தை
இன்றியு நிகழ்த லின்விப ரீதமாம்
வைதன்மீய திட்டாந் தத்துச்
சாத்தி யாவிளா விருத்தி யாவது
சாதன தன்ம மீண்டு
சாத்திய தன்ம மீளா தொழிதல்
சத்த நித்த மமூர்த்தத் தென்றால்
யாதொன் றியாதொன்று நித்தமு மன்றது
அமூர்த்தமு மன்று பரமாணுப் போலெனின்
அப்படித் திட்டாந்த மாகக் காட்டப் பட்ட
பரமாணு நித்தமாய் மூர்த்த மாதலிற் |