பக்கம் எண் :

பக்கம் எண் :490

Manimegalai-Book Content
29. தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை





415





420





425





430





435





440








சாதன வமூர்த்த மீண்டு
சாத்திய நித்த மீளா தொழிதல்
சாத னாவியா விருத்தி யாவது
சாத்திய தன்ம மீண்டு
சாதன தன்ம மீளா தொழிதல்

சத்த நித்த மமூர்த்தத் தென்றால்
யாதொன் றியாதொன்று நித்த மன்றஃ
தமூர்த்தமு மன்று கன்மம்போ லென்றால்
வைதன் மியதிட் டாந்த மாகக்
காட்டப் பட்ட கன்மம்

அமூர்த்தமாய் நின்றே யநித்த மாதலிற்
சாத்திய மான நித்திய மீண்டு
சாதன மான வமூர்த்த மீளா
துபயாவி யாவிருத்தி காட்டப் பட்ட
வைதன் மியதிட் டாந்தத்தி னின்று

சாதன சாத்தியங்கள் மீளாமை யன்றியும்
உண்மையி னுபயா வியாவி ருத்தி
இன்மையி னுபயா வியாவி ருத்தி
எனவிரு வகை யுண்மையின்
உபயாவி யாவிருத்தி யுள்ள பொருட்கட்

சாத்திய சாதன மீளா தபடி
வைதன் மியதிட் டாந்தங் காட்டல்
சத்த நித்த மமூர்த்த மாதலின்
என்றாற் கியாதொன் றியாதொன்று நித்தமன்
றமூர்த்தமு மன்றா காசம்போ லென்றால்

வைதன்மியா திட்டாந்த மாகக் காட்டப்பட்ட
ஆகா சம்பொரு ளென்பாற்கு
ஆகாச நித்தமு மமூர்த்தமு மாதலாற
சாத்திய நித்தமுஞ் சாதனமா வுள்ள
அமூர்த்தமு மிரண்டு மீண்டில வின்மையின்

உபயாவி யாவிருத்தி யாவது
சத்த மநித்த மூர்த்த மாதலான்
என்றவிடத் தியாதொன் றியாதொன் றநித்த
மூர்த்தமு மன்றா காசம் போலென