பக்கம் எண் :

பக்கம் எண் :491

Manimegalai-Book Content
29. தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

445





450





455





460





465





470





1--13.

வைதன் மியதிட் டாந்தங் காட்டில்

ஆகா சம்பொரு ளல்லவென் பானுக்கு
ஆகாசந் தானே யுண்மையின் மையினாற்
சாத்திய வநித்தமுஞ் சாதன மூர்த்தமும்
மீட்சியு மீளா மையுமிலை யாகும்
அவ்வெதி ரேக மாவது சாத்தியம்

இல்லா விடத்துச் சாதன மின்மை
சொல்லாதே விடுத லாகுஞ் சத்தம்
நித்தம் பண்ணப் படாமையா லென்றால்
யாதொன் றியாதொன்று நித்த மன்று
பண்ணப் படுவ தல்லா ததுவும்

அன்றெனு மிவ்வெதி ரேகந் தெரியச்
சொல்லாது குடத்தின் கண்ணே பண்ணப்
படுதலு மநித்தமுங் கண்டே மாதலான்
என்னின் வெதிரே கந்தெரி யாது
விபரீத வெதிரேக மாவது

பிரிவைத் தலைதடு மாறாச் சொல்லுதல்
சத்த நித்த மூர்த்த மாதலின்
என்றா லென்று நின்ற விடத்து
யாதோ ரிடத்து நித்தமு மில்லையவ்
விடத்து மூர்த்தமு மில்லை யெனாதே

யாதோ ரிடத்து மூர்த்தமு மில்லையவ்
விடத்து நித்தமு மில்லை யென்றால்
வெதிரேக மாறு கொள்ளு மெனக்கொள்க
நாட்டிய விப்படித் தீயசா தனத்தாற்
காட்டு மனுமான வாபா சத்தின்

மெய்யும் பொய்யு மித்திர விதியால்
ஐய மின்றி யறிந்துகொ ளாய்ந்தென்

உரை

இறைஞ்சிய இளங்கொடி தன்னை-தன்னை வணங்கிய இளங்கொடி போன்ற மணிமேகலையை, அறம் திகழ் நாவின் அறவணன் வாழ்த்தி - அறவுரையால் விளக்கமுறும் நாவினையுடைய அறவணவடிகள் வாழ்த்தி, உரைப்போன் - காவிரிப்பட்டினம் கடன் கோட்படுதற்கு நேர்ந்தகாரணம் கூறுவானாய், நாக நாடான்வோன்