29.
தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை
|
|
"யாதொன்று யாதொன்று அநித்தம் அன்று மூர்த்தமு மன்று - யாதொரு பொருள் அநித்தமல்லது
அது மூர்த்தமல்லாதது என விபக்கத் தொடர்ச்சி மீட்சி கூறி; ஆகாசம்போல்
என வைதன்மிய திட்டாந்தம் காட்டில் - ஆகாசம் போலவென்று வைதன்மிய நெறி
பற்றிய திட்டாந்தம் காட்டப்படுமானால்; ஆகாசம் பொருளல்ல வென்பானுக்கு-ஆகாசத்தைப்
பொருளாகக் கொள்ளாத வாதிக்கு; ஆகாசம் உண்மையின்மையினால் - ஆகாசம் உள்
பொருளன்றாதலால்; சாத்திய வநித்தமும்-சாத்திய தன்மமான அநித்தத்துவமும்;
சாதன மூர்த்தமும்-சாதன தன்மமான மூர்த்தத்துவமும்; மீட்சியும் மீளாமையும் இலையாகும்
- மீண்டு நிற்றலும் மீளாதே நின்றியைதலும் இல்லையாய்க் குற்றமாம் எ - று.
|
காட்டப்படும்
திட்டாந்தம் பொருளாகக் கொள்ளப்படாவிடத்து அதன்பால் உளவென்றும் இலவென்றும்
கூறற்குரிய தன்மங்களே யில்லையாய் ஒழிதலின், அத்தகைய பொருளைத் திட்டாந்தமாகக்
காட்டுதல் குற்றமாம் ; ஆதலால் இஃது இன்மையின் உபயாவியா விருத்தியென்னும்
வைதன்மிய திட்டாந்தக் போலியெனப் படுவதாயிற்று. உம்மை : இசைநிறை. அன்றென்பதை
அநித்தத்துக்கும் கூட்டுக.
|
இனி,
நியாயப் பிரவேசமுடையாரைப் போலவே பிரசத்தபாதரும் இவ் வுபயாவியா
விருத்தியை ஒன்றாகவே கொண்டு ஆகாசத்தையே திட்டாந்தமாகக்
1
காட்டுகின்றார்.
|
450--9.
|
அவ் வெதிரேகமாவது-அவ் வெதிரேகமென்னும் வைதன்மிய திட்டாந்தக் போலியாவது;
சாத்தியமில்லாவிடத்து-சாத்திய தன்மம் இல்லாதவிடத்து; சாதனம் இன்மை சொல்லாதே
விடுதலாகும் -சாதன தன்மம் இல்லையென்று எடுத்துச் சொல்லா தொழிவதாம்; சத்தம்
நித்தம் பண்ணப்படாமையால் என்றால் - சத்தம் நித்தமாகும் பண்ணப்படுவதன்றாதலால்
என்ற வழி; யாதொன்று யாதொன்று நித்தமன்று-யதொரு பொருள் நித்தமன்றோ;
பண்ணப்படுவதல்லாததும் அன்று எனும்-பண்ணப்படாததன்று என்னும்; இவ் வெதிரேகம்
தெரியச் சொல்லாது - இவ் வெதிரேகக் கூற்றை எதிரிக்குத் தோன்ற எடுத்துச்
சொல்லாமல்; குடத்தின் கண்ணே பண்ணப்படுதலும் அநித்தமும் கண்டேமாதலால் -
குடமாகிய திட்டாந்தத்தின்கண் செயப்படுந் தன்மையும் அநித்தத்துவமும் கண்டுள்ளேமாதலால்;
என்னின்-என்று சொன்னால் ; வெதிரேகம் தெரியாது - குடத்தின்கண் சாத்திய
தன்மமான நித்தியத்துவம் இல்லாமையால், பண்ணப்படாமையுமில்லை என்ற வெதிரேக
வியாத்தி விளங்கத் தெரிவிக்கப்படாமையின் அவ் வெதிரேக மென்னும் திட்டாந்தப்
போலியாயிற்று எ - று.
|
1
பிரசத்த பாடி. பக். 247.
|