|
பக்கத்தின்
மறுதலையான விபக்கத் தொடர்ச்சியை மீட்சியென வழங்குதலின், அதற்கேற்ப,
அதன் வியாத்தி வசனத்தைப் பிரிவென்றார். பக்கத்தைப் புலப்படக் கூறினாலன்றி
விபக்கம் பெறப்படாமை பற்றி, ''''சத்தம் நித்தம் மூர்த்தமாதலினென்றால்'''' என்றார். இனி, வழுவின்றிக் கூறற்பாலதாகிய விபக்க வியாத்தி வெதிரேக வசனம்
இஃதென்பார், "யாதோரிடத்து நித்தமும் இல்லை அவ்விடத்து மூர்த்தமும் இல்லை''
யென்றும், இவ்வாறு கூறாது தலைதடுமாறிக் கூடும் தவறாய முறையைக்காட்டற்கு, ''''யாதோரிடத்து
மூர்த்தமுமில்லை அவ்விடத்து நித்தமுமில்லை''''யென்றும்,இக் கூற்று விபரீத வெதிரேகமாம்
என்பார், ''''வெதிரேகம் மாறு கொள்ளுமெனக் கொள்க" என்றும் கூறினார். வெதிரேகக்
கூற்றை மாறுகொளக் கூறுதலின் விபரீ தமாமென வறிக. என்றால், என்றால் மாறுகொள்ளும்
என இயைத்து, மூர்த்தமாதலின் என்றால் அதற்குரிய வியாத்தி வசனத்தை...என்று
தடுமாறிச்சொன்னால் மாறுகொள்ளும் என்றவாறா மென்க.
இனி, நியாயப் பிரவேசமுடையார்,
இவ் வாசிரியர் கூறியதுபோல இலக்கணங் கூறாது உதாரணமட்டிற் கூறுவர். இதனைப்
பிரசத்தபாதர் விபரீத வியாவிருத்த மென்றனர். இதுகாறுங் கூறியவாற்றால், மணிமேகலை
யாசிரியர் காலத்தே தமிழகத்து நிலவிய பௌத்தரிடையே பக்கப்போலி ஒன்பதும்,
ஏதுப்போலி பதினான்கும் திட்டாந்தப்போலி பத்துமாக முப்பத்துமூன்று போலிகள்
நிலவின வென்பதும், இவற்றையே நியாயப் பிரவேசமுடையார் மேற்கொண்டு வடநாட்டுப்
புத்தரிடையே பரப்ப,அவர்கள் ஏனையோர் கூறியவற்றோடு இயைத்துப் பிற்காலத்தே
தமக்கேற்றவாறு பெருக்கிக் கொண்டனரென்பதும்உணரற் பாலனவாம். காட்சி, கருத்து
என்ற இருவகை அளவைகளையும்கூறற்கு முன், அளவையின் இன்றியமையாமை, அளத்தற்குரிய
கருவிகள், அவை பொருள்களை யளக்குந்திறம், அறிவ, அறியாமை, ஐயம், வழு முதலியனவும்,
அளவைக்குப் பின் கூறப்படும் வாதவியல், தோல்வி வகை முதலியனவும் இந் நூற்கண்
கூறப்படவில்லை. நியாயப் பிரவேசமுடையார். தம் நூற்கண் கூறற்குரியன, முறையே,
சாதனாபாசம், சுவார்த்தப் பிரமாணம்,பிரத்தியக்கம், அனுமானம்,பிரத்தியக்காபாசம்,
அனுமானாபாசம், தூஷணம், தூஷணாபாசம் என எட்டு வகையாகக் கூறுதலால், இவ் வெட்டும்,
மணிமேகலை யாசிரியர் காலத்தே நம் தமிழகத்தே நிலவின வென்பது துணிபாம்.ஆயினும்,இவர்
ஈண்டு அளவை நூல் கூறவந்தா ரல்லராகலின், உண்மை யுணர்வுக்கு இன்றியமையாவெனக்
கொண்ட அளவை யிரண்டையுமே கூறலுற்று, அவற்றுட் காட்சியைச்சிறிதும் கருத்தளவையைப்
பெரிதுமாகக்கூறினார். மேலும், அளவை நூல் கூறும் கருத்துக்களுட் சிலவற்றைச் சமயக்கணக்கர்தம்
திறங்கேட்ட காதைக்கண் அளவை வாதிகூற்றில் வைத்துக்கூறியிருப்பதும் குறிக்கத்
தக்கதாம். அவன் கூறிய காட்சியுங் கருத்தும் தமக்கு உடன்பாடாகலின், அவற்றுள்
தம் சமயநூற் கருத்துக்கேற்ப விளக்கத்
|