பக்கம் எண் :

பக்கம் எண் :551

Manimegalai-Book Content
29. தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

தகுவனவற்றை இக் காதைக்கண் தொடக்கத்தே விளக்கி விடுகின்றார். காட்சிபற்றி அளவைவாதி கூறியவற்றைத் தழீஇக் கொள்பவர், அவற்றைச் "சுட்டுணர்வைப் பிரத்தியக்கமெனச் சொலிவிட்டனர்நாமசாதிக் குணக் கிரியைகள், மற்றவை யனுமானத்தும் அடையும் என"'' என்பதனால் செம்மை செய்துகொள்வதும்,கருத்துப்பற்றி அவன் கூறுவனவற்றைத் தழீஇக் கொள்பவர், கருத்தளவை பற்றியும் அதன் பக்க முதலிய உறுப்புக்களைப்பற்றியுங் கூறுவனவற்றால் தூய்மை செய்துகொள்வதும் ஈண்டு நினைவுகூரத் தகுவனவாம். எதிரி கூறும் கூற்றிலுள்ள குற்றங்களைக் காட்டுதல் தூடணமென்றும, அவற்றைக் காட்டுமிடத் துண்டாகுங் குற்றங்களைத் தூடணாபாசமென்றும் கூறுப. அத் தூடணாபாசந்தானும் ஆறுவகைப்படும் என்றும், அவை "குறையில்லாத சாதனங்களிற் குறைகூறுதல்,குற்றமற்ற பக்கவுறுப்பிற் பக்கக் குற்றங்கூறுதல், சித்தித்திருக்கும் ஏதுவை அசித்தவேலு வென்றல், ஏகாந்த வேதுவை அநேகாந்த வேதுவென்றல், அவிருத்தவேதுவை விருத்தவேது வென்றல், குற்றமற்ற திட்டாந்தத்தைக் குற்றமுடையதென்றல்" என்றும் கூறுப. ஈண்டு, கூற்று நிகழ்த்தும் அறவணவடிகள் மணிமேகலைக்கு உண்மையுணர்ந்துகோடற்கேற்ற கருவியாக இவற்றைக் கூறுகின்றாரேயன்றி, பிறரோடு சொற்போர் நிகழ்த்தற் பொருட்டன்மையின், இவற்யைக் கூறாராயினார்.

469--72. இப்படி நாட்டிய தீய சாதனத்தால் - இவ்வாறு காட்டப் பட்ட குற்றமுடைய சாதனங்களால்; காட்டும் அனுமான ஆபாசத்தின்-காட்டப்படும் போலிக் கருத்துக்களின்; மெய்யும் பொய்யும்-மெய்ம்மைத் தன்மையும் பொய்ம்மைத் தன்மையும்; இத் திற விதியால் (விலக்கால்)--இம் மெய்யும் பொய்யுமாகிய கூறுகட்கேற்பக் கொள்ளுவதும் தள்ளுவதும் செய்தற்கமைந்த விதிவிலக்குகளைக் கொண்டு: ஐயமின்றி-ஐயந் திரிபின்றி; ஆய்ந்து அறிந்துகொள் - ஆராய்ந்து அறிந்து கொள்க; என்-என்று கூறினான் எ-று.
 
         அளவை நெறிபற்றி இதுகாறுங் கூறியவற்றைத் தொகுத்துச் சுட்டுதலின், "இப்படி நாட்டிய" என்றும், தீய சாதனத்தாற் காட்டுவதே அனுமானாபாசம் என்பதென்றற்கு, "தீய சாதனத்தாற் காட்டும் அனுமானாபாசத்தின்" என்றும் கூறினான். நியாயப் பிரவேசமுடையாரும் "ஹேத்து வாபாஸ பூர்வகம்ஞானம் அனுமானாபாஸம்" என்பது காண்க. பக்கம், ஏது, திட்டாந்தமென்ற மூன்றனுள், ஏது சிறந்தமையின், "தீய சாதனத்தால் காட்டும் அனுமானாபாசம்" என்றான்; ஆயீனும், தீய பக்கமும் தீய எடுத்துக் காட்டும் அனுபானாபாசமாம் என்பது கருத்தாகக் கொள்க. 1 "மெய்யும் பொய்யும்" கூறியதனால்,


1 தீயசாதனமாவது பக்கப் போலி ஏதுப் போலி திட்டாந்தப் போலி யென்பதை நியாயப் பிரவேசம், "ஏஷாம் யக்ஷ ஹேது த்ருஷ் டாந்தா பாஸா நாம் வசநாநி ஸாதனாபாசம்" என்பது காண்க.