|
அவற்றிற்கேற்ப விதியும் விலக்கும் கொள்ளப்பட்டன. இவ் விதி விலக்குகள்
மேல்வரும் பவத்திற மறுகெனப் பாவைநோற்ற காதைக் கண் கூறப்படுதலின், அவற்றை
யீண்டுத் தோற்றுவாய் செய்தார்.
இளங்கொடி தன்னை, வாழ்த்தி,
உரைப்போன், விழாக்கோள் மறப்ப, தன் விழாத் தவிர்தலின் மணிமேகலா தெய்வம்
என்பவட் கொப்ப, அவனிடு சாபத்து,நகர் கடல் கொள்ள, இப்பதிப் படர்ந்தனம்
என்றலும்,இறைஞ்சி, வைத்திலேன்,அருளுக என்ன, நங்காய் நொடிகுவென் கேள்நீ்;
அளவை இரண்டே, ஏனை எல்லாம் அனுமானமாம்; பக்கம், ஏது, திட்டாந்தம். உபநயம்,நிகமனம்
என்ன ஐந்துள; உபநயம் நிகமனம் இரண்டும் திட்டாந்தத்தில் அடங்கும்; பக்கம்
ஏது திட்டாந்தங்கள் நல்லவும் தீயவும் உள; நன்பக்கம் என நாட்டுக; நல்லேது
ஊன்றி நிற்றலும், உண்டாதலும் இன்றியே விடுதலும், ஏதமில் திட்டாந்தம் இருவகைய,தீய
பக்கமும் தீய வேதுவும் தீயவெடுத்துக் காட்டு மாவன பக்கப் போலியும் ஏதுப் போலியும்
திட்டாந்தப் போலியுமாம்; பக்கப் போலி பிரத்தியக்க விருத்தம் முதல் அப்பிரசித்த
சம்பந்தம் என ஒன்பது வகைப்படும்; ஏதுப்போலி அசித்தம் அநைகாந்திகம், விருத்தம்
என மூன்றாகும். நான்கு அசித்தம்; அநைகாந்திகமும் ஆறு; விருத்தம் விளம்பில்
நான்கு வகையதாகும்; தீயவெடுத்துக் காட்டாவன திட்டாந்த வாபாசங்கள்;சாதன்மிய
திட்டாந்த வாபாசம் ஓதில்,என்ன ஐந்து; வைதன்மிய திட்டாந்தாபாசமும் என்ன
ஐவகைய; இப்படி நாட்டிய தீய சாதனத்தால் அனுமா னாபாசத்தின் மெய்யும் பொய்யும்
இத்திற விதியால், ஆய்ந்து அறிந்து கொள் என்றான் என, வினைமுடிபு கொள்க.
தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை முற்றிற்று.
|