முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
பக்கம் எண் :555
Manimegalai-Book Content
30. பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை
35
40
45
50
55
60
65
நயங்க ணான்காற் பயன்க ளெய்தி
இயன்றநால் வகையால் வினாவிடை யுடைத்தாய
நின்மிதி யின்றி யூழ்பா டின்றிப்
பின்போக் கல்லது பொன்றக் கெடாதாய்ப்
பண்ணுந ரின்றிப் பண்ணப் படாதாய்
யானு மின்றி யென்னது மின்றிப்
போனது மின்றி வந்தது மின்றி
முடித்தலு மின்றி முடிவு மின்றி
வினையும் பயனும் பிறப்பும் வீடும்
இனையன வெல்லாந் தானே யாகிய
பேதைமை செய்கை யுணர்வே யருவுரு
வாயி லூறே நுகர்வே வேட்கை
பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்
இற்றென வகுத்த வியல்பீ ராறும்
பிறந்தோ ரறியிற் பெருமபே றறிகுவர்
அறியா ராயி னாழ்நர கறிகுவர்
பேதைமை யென்ப தியாதென வினவின்
ஓதிய விவற்றை யுணராது மயங்கி
இயற்படு பொருளாற் கண்டது மறந்து
முயற்கோ டுண்டெனக் கேட்டது தெளிதல்
உலக மூன்றினு முயிரா முலகம்
அலகில பல்லுயி ரறுவகைத் தாகும்
மக்களுந் தேவரும் பிரமரு நரகருந்
தொக்க விலங்கும் பேயு மென்றே
நல்வினை தீவினை யென்றிரு வகையாற்
சொல்லப் பட்ட கருவிற் சார்தலுங்
கருவிற் பட்ட பொழுதினுட் டோற்றி
வினைப்பயன் விளையுங் காலை யுயிர்கட்கு
மனப்பே ரின்பமுங் கவலையுங் காட்டுந்
தீவினை யென்ப தியாதென வினவின்
ஆய்தொடி நல்லா யாங்கது கேளாய்
கொலையே களவே காமத் தீவிழை
வுலையா வுடம்பிற் றோன்றுவ மூன்றும்
பொய்யே குறளை கடுஞ்சொற் பயனில்
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்