முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
பக்கம் எண் :556
Manimegalai-Book Content
30. பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை
70
75
80
85
90
95
100
சொல்லெனச் சொல்லிற் றோன்றுவ நான்கும்
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சியென்
றுள்ளந் தன்னி னுருப்பன மூனறுமெனப்
பத்து வகையாற் பயன்றெரி புலவர்
இத்திறம் படரார் படர்குவ ராயின்
விலங்கும் பேயு நரகரு மாகிக்
கலங்கிய வுள்ளக் கவலையிற் றோன்றுவர்
நல்வினை யென்ப தியாதென வினவிற்
சொல்லிய பத்தின் றொகுதியி னீங்கிச்
சீலந் தாங்கித் தானந் தலைநின்று
மேலென வகுத்த வொருமூன்று திறத்துத்
தேவரும் மக்களும் பிரமரு மாகி
மேவிய மகிழ்ச்சி வினைப்பய னுண்குவர்
உணர்வெனப் படுவ துறங்குவோ ருணர்விற்
புரிவின் றாகிப் புலன்கொளா ததுவே
அருவுரு வென்பதவ் வுணர்வு சார்ந்த
உயிரு முடம்பு மாகு மென்ப
வாயி லாறு மாயுங் காலை
உள்ள முறுவிக்க வுறுமிட னாகும்
ஊறென வுரைப்ப துள்ளமும் வாயிலும்
வேறு புலன்களை மேவுத லென்ப
நுகர்வே யுணர்வு புலன்களை நுகர்தல்
வேட்கை விரும்பி நுகர்ச்சியா ராமை
பற்றெனப் படுவது பசைஇய வறிவே
பவமெனப் படுவது கரும வீட்டந்
தருமுறை யிதுவெனத் தாந்தாஞ் சார்தல்
பிறப்பெனப் படுவதக் கருமப் பெற்றியின்
உறப்புண ருள்ளஞ் சார்பொடு கதிகளிற்
காரண காரிய வுருக்களிற் றோன்றல்
பிணியெனப் படுவது சார்பிற் பிறிதாய்
இயற்கையிற் றிரிந்துடம் பிடும்பை புரிதல்
மூப்பென மொழிவ தந்தத் தளவுந்
தாக்குநிலை யாமையிற் றாந்தளர்ந் திடுதல்
சாக்கா டென்ப தருவுருத் தன்மை
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்